01.!
பிச்சை!
------------ !
பிச்சைக்காரர்களுக்கோ!
போர்!
இடப்பெயர்வு!
ஊனம்!
இயலாமை!
கந்தலுடை மனைவி!
பசியோடிருக்கும் மகன்!
பருவமெய்திய ஏழாவது மகளென!
ஆயிரம் காரணங்கள்!
பிச்சையெடுக்க!
நடத்துநர்களுக்கோ!
ஒன்றே ஒன்று தான்!
“சில்லறையில்லை”!
!
02.!
கற்பிழந்த கதை!
----------------------- !
விடுமுறையில் கூட !
வேலைக்குச் சென்றாய்...!
உணவருந்தா விட்டாலும்!
உதட்டுச் சாயம் பூசினாய்!
அம்மாவுடன் சண்டைபிடித்து!
அலங்கோலமாய் ஆடையணிந்தாய்!
காலம் தாழ்த்தி !
வீடு வந்து கோயிலென்றாய் !
கண்டிக்கும் போதெல்லாம்!
யாரோ அண்ணண்களோடு!
ஒப்பிட்டாய்!
ஆண்நட்பு, பெண்ணுரிமை!
அத்தனையும் பேசிய நீ!
அதையும் கூறிவிட்டல்லாவா!
அணைந்திருக்க வேண்டும்!
அதான்,!
“நீ கற்பிழந்ததையும் - உன்!
கடவுள் கைவிட்டதையும்”!
!
03.!
“அடிமைகளின் சாதனைகள்” !
-----------------------------------------!
பெரும்பாண்மையான காலங்களில்!
நாம் அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்!
பெரும்பாண்மையினரால்...!
உணர்வுகள் !
ஒடுங்குமளவிற்கான அடிகள்!
உள்ளும் புறமும்!
இருப்பினும்... !
இருப்பினும்...!
மார் தட்டிக் கூறுவேன்..!
மனித உரிமைக்காய் முழங்கும்!
எம்மினத்தால் தான்!
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் !
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது!
“இரட்டைச் சுடுகாடு”
மன்னார் அமுதன்