ஆடைகள் இழந்த!
என் உடலைத் தின்னும்!
உங்கள் கண்களில்!
எத்தனை பெருமை!
நான் உங்கள் சகோதரி என்றோ!
மகள்போல் என்றோ!
கால்களில் மண்டியிட்டு!
உறவின் தூய்மையை!
களங்கம் செய்யேன்!
காணாமல்போன!
என் சகோதரிகளின்!
உடல்களில்!
உங்கள் வன்முறையை!
படித்திருக்கிறேன்!
நான் அழமாட்டேன்!
எனக்குத் தெரியும்!
என் கண்ணீர்தான்!
உங்கள் உற்சாக பானம்!
நான் சிதைந்தாலும்!
காயங்களின் வழியே!
உயிர் வடிந்து சென்றாலும்!
என் கண்ணீரால்!
பெருமைப்படுத்த மாட்டேன்!
உங்கள் இயலாமையை!
எனக்கு பின்னும்!
என் சகோதரிகள்!
இங்கு இழுத்துவரப்படலாம்!
மரணத்தின் கடைசி நிமிடம்வரை!
மானம் தேடலாம்!
அவர்களும் என்னைப்போல்!
உரக்கச் சொல்வார்கள்!
சதைகளில் இல்லை!
எங்கள் மானம்!
கடைசியாய் ஒன்று!
தாயின் மரணத்தின் போதோ!
தலைப்பிரசவத்தில்!
துணைவி துடிக்கும் போதோ!
அழுதுவிடாதே!
உன் கண்களுக்கு!
அந்தத் தகுதியில்லை!
-சு.சிவா
சு.சிவா