என் மெளனங்களையும்!
நழுவித் தவழும் அலைகளையும்!
கைப்பிடித்து விளையாடியதோடு!
இந்த கணம் நின்றுவிடவில்லை.!
பேரலைகளையும்!
சிற்றலைகளையும் வருடி!
இசைப்பேரொலியை!
ஊற்றாகப் பெருக்கினேன்!
காற்றின் திசைவழியைக் கண்டறிந்து!
ஒரு பறவை இருளில் மறைகிறது.!
ஒற்றைவால்நட்சத்திரத்தால் பொழுதறிந்த!
இரவு பகலற்ற நெடும்பயணத்தில்!
ஆயுள் உருகி வழிந்தோடுகிறது.!
பேரிடி இரைச்சல்களின்!
இடிபாடுகளுக்கிடையே!
தொலைந்து போன!
என் குழந்தையின் புன்னகையைத்!
தேடிக் கொண்டிருக்கிறேன்.!
விசித்திரக்கடலுக்குள்!
உயிர்பிடித்து அழைத்துச் சென்றாய்!
மீனாய் வாழ முடியவில்லை.!
அலைகள் துப்பிய சடலமாய்!
கடலோரம் ஒதுங்கிக் கிடக்கிறேன்.!
இன்றும் விடிந்த பொழுது!
எனக்கென்று இல்லாமல் போக!
அழுகிய உதடுகளிலும்!
உருத்தெரியா கன்னங்களிலும்!
ஒரு முத்தம்தர முயல!
பிணங்களால் நிரப்பப் படுகிறது கடல்
ஹெச்.ஜி.ரசூல்