1. !
உன் தாவணி !
பிடித்து !
நீ தவிர்க்க நினைத்த !
வெய்யில் !
உன் கைகளை !
மாலையாக்குகிறது !
என் நிழலுக்கு.... !
!
2. !
முட்டாள் நிழலே! !
எனக்கே இடமில்லாத !
அவள் பிடிக்கும் !
குடையினுள் !
நீ ஏன் நுழைய !
முயற்சிக்கிறாய்? !
!
3. !
மழை ஓய்ந்த நேரத்து !
வெய்யிலில் !
சூடாக என் தேகம். !
எனக்கும் சேர்த்து !
நடுங்குகிறது !
ஓடும் நீரில் !
என் நிழல்.... !
!
4. !
மாலை நேர !
க்ஷருட்டை விரட்ட !
சன்னல் கதவுகளைத் திறந்தேன். !
வெளிச்சமாக உள்ளே !
நுழைந்தது !
மாடியில் பாடம் !
படிக்கும் !
உன் நிழல்..... !
!
5. !
விறகு கட்டைகள் !
அடுக்கி !
துணி போர்த்து !
நீயும் நானும் !
கட்டிய வீட்டின் !
நிழல் !
மொட்டை மாடியில் !
இன்னமும் இருக்கிறது - !
ஒதுங்க ள் இல்லாமல். !
6. !
மின்சாரம் !
தடைபட்டால் !
நிஜம்மாகவே !
இருண்ட காலம் தான்... !
நேருக்கு நேராய் நின்றும் !
பார்த்துக் கொள்ள !
இயலாத இருளில் !
நம்மை பேசிக் கொண்டிருந்தது !
நம் நிழல்கள்.... !
!
7. !
எப்போதும் !
என்னை ஒட்டிக் கொண்டிருக்கும் !
நிழலே !
நீ எங்கே தூங்குவாய்? !
என் படுக்கையின் கீழா? !
!
8. !
என்னைப் !
புதைக்க !
இருளிலே !
தூக்கிச் செல்லுங்கள். !
என் நிழலுக்குத் !
தெரிய வேண்டாம் !
இனி எப்போதும் !
பிறப்பில்லை அதற்கென்று......... !
!
9. !
தகிக்கும் வார்த்தைகளால் !
தர்க்கம் நிகழ்த்துகிறோம் !
எதிரும் புதிருமாக !
நாம். !
மௌனயுத்தம் நடத்துகின்றன !
நம் நிழல்கள் !
ஓரே திசையில்..... !
!
நன்றி:
நண்பன்