பெண் விடுதலை .. உறவுகளின் சிகரம் தாய் !
!
01.!
பெண் விடுதலை !
-----------------------!
எலிகளுக்கு விடுதலை பூனைகளால் கிடைக்காது!
பெண்களுக்கு விடுதலை ஆண்களால் கிடைக்காது!
மண் புழவாய்ப் நெளிந்தது போதும்!
பெண் புலியாய்ப் புறப்படு நாளும்!
புழுவைக்கூட சீண்டினால் சீற்றம் வரும்!
பெண்ணே! உனக்கு சீற்றம் எப்போது வரும்!
கொட்டக் கொட்ட குனிந்தது போதும்!
புராணப்புளுகை நம்பியது போதும்!
புதுமைக்கருத்தை ஏற்றிட வேண்டும்!
ஆண்கள் என்பதால் ஆணவம் கொள்வதும் ஏன்?!
பெண்கள் என்பதால் அடிமைப்படுத்துவதும் ஏன்?!
அடிமை விலங்கைத் தகர்த்திடல் வேண்டும்!
அற்புதச்சிறகை விரித்திடல் வேண்டும்!
ஆணுக்குள்ள சுதந்திரம் பெண்ணுக்கும் வேண்டும்!
அர்த்தமற்ற சுதந்திரம் யாருக்கு வேண்டும்!
புதியதோர் உலகம் செய்திடல் வேண்டும்!
புதுமைப் பெண்கள் அதனை ஆள வேண்டும்!
02.!
உறவுகளின் சிகரம் தாய் !
-----------------------------!
உயிரினங்களின் முதல் மொழியே!
ஒப்பற்ற அம்மா நீயே!
உலகிற்கு அறிமுகம் செய்தாய்!
உலகம் போற்றும் உறவு தாய்!
உறவுகள் ஆயிரம் உண்டு!
உயர்ந்த அன்னைக்கு இணை ஏது?!
பத்துத்திங்கள் என்னுயிர் வளர்த்தாய்!
எட்டி உதைத்தாலும் சிரித்தாய்!
எண்ணி எண்ணிப் பூரித்தாய்!
பால் நிலவைப் பார்த்திட வைத்தாய்!
பால் சோறோடு பண்பையும் ஊட்டிய தாய்!
தாலாட்டித் தூங்கிட வைத்தாய்!
தன் தூக்கத்தை மறந்தாய்!
நோயுற்ற போது துடித்தாய்!
நோய் நீங்கிட மருந்தளித்தாய்!
தாய்மொழியோடு தன்மானமும் பயிற்றுவித்தாய்!
தன்னிகரில்லாப் பாசமும் பொழிந்தாய்!
பசியோடு பசியாற வைத்தாய்!
புசிப்பதை ரசித்துப்பசியாறிய தாய்!
தியாகத்தின் திரு உருவம் தாய்!
தரணியில் பேசும் தெய்வம் தாய்
இரா.இரவி