அழகிய ரோஜாவே,!
என்னால் உனக்கு வெட்கமா என்ன?!
இன்று உன்னை காணவில்லை......?!
நீ காதலின் மலராம்- நம்ப முடியாத சீவன்களின் கைக்கூலி......!!
ரோஜாவே,!
நீதான் மன ஆறுதல்,!
வரண்ட இதயத்துக்கு குளிர்சி அளிப்பவள்- இருந்தும்!
உன்னை ஏன் பறிக்கிறார்கள்?!
நீ பெண்களைப்போல் உரிமை போராட்டம் செய்வதில்லையா?!
உன்னை நான் காணவில்லை......??!
உன்னை பறித்தவர் யார்?!
இன்று உன்னை காணாமல் தவிக்கின்றேன்,!
என் மனம் எரிகின்றது.!
உன்னை காணும் தாகத்தால் என்னை கூட மறந்துவிட்டேன்.!
நீ விருட்சத்தில் வித்தியாசமான அழகு,!
உன்னை பறித்துவிட்டால்..,!
நீ கண்ணீர் வடித்து நலிவடைகிறாய்..!
இது அந்த பாவிகளுக்கு - கொள்ளை காரர்களுக்கு !
ஏன் தானோ புரியவில்லை?!
உன் முற்கவசங்கள் எங்கே?!
அவைகட்கும் கைக்கூலி கிடைத்து விட்டதாமோ?!
அழகிய செந்நிற ரோஜாவே,!
வடிக்கின்றேன் கண்ணீரை நானும் இங்கே!
உன்னைப்போல் ரொஜாவாய்....!
பேசாமடந்தை நீ தானடி!!
அப்பாவியும் நீதானடி!!!
நீயும் ஒரு பெண்தானே!!! !
!
-துர்ரத் புஷ்ரா!
Durrath Bushra Annes.Srilanka

துர்ரத் புஷ்ரா