கல்லறைக்குள் கண்மணிகள் ! - வல்வை சுஜேன்

Photo by FLY:D on Unsplash

இறையாண்மை மிக்க இலங்கையென!
இன்னும் எத்தனை காலம்தான் !
ஏமாந்து கிடப்பாய் தமிழா!
துயிலும் இல்லங்களும் !
உழுது அழிக்கப்படுகிறது இங்கே !
ஊசி முனை நிலத்திற்கும்!
உரிமை இல்லாதவன் தமிழன்!
ஆறடி நிலத்தினை !
ஆட்சி கொள்வதோ என !
நூலகப் பொதிகையாய்!
அடுக்கப் பட்ட எங்கள் !
ஆத்ம ஜோதிகளை!
துயிலும் இல்ல பெட்டகங்களை உடைத்து!
அழிக்கின்றான் பேரினவாதச் சிங்களவன் !
கண்களை விற்று காட்சி வாங்குவதோ!
கல்லறை என்று சொல்லி !
எங்கள் கண்மணிகளை நாம் இழப்பதோ!
தாயகக் கனவொன்றே இவர்கள் தாகம்!
தன்மான உயர்வொன்றேதான் !
இவரின் உயரிய வேதம்!
இறந்தவர் என்றால் !
கல்லறை என்போம்!
விதைக்கப் பட்டவர்கள் இவர்கள்!
விழி மூடி துயில்கின்றனர்!
தூயவர்கள் துயில்கொள்ள !
ஓர் இல்லமும் இல்லை யென !
கொல்லும் மனிதாபமும் இல்லாதோரிடம் !
இன்னும் மண்டி இட்டு கிடப்பதோ தமிழா !
எழடா எழடா எம் உறவே!
எரிமலைதான் நீயும் எழு கனலே!
அடிமை என்பவர் இனியும் இல்லை!
அடிபணி வாழ்வே உலகில் துயர். !
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.