பூத்திருந்த பூவொன்று!
செடிவிட்டுக் கழன்று!
புல் மீது விழுந்தென்னெஞ்சில்!
தீப்பற்ற வைத்தது !!
கூட்டிலிருந்து!
காகம் கொத்திச்!
சொண்டகன்று!
நிலம் வீழ்ந்தென்!
கரண்டிப் பால் நக்கிப்!
பின்னிறந்த அணில்குஞ்சு!
என்னிதயத்தில்!
அமிலமள்ளிப் பூசியது !!
பாதை கடக்கமுயன்று!
கண்முன்னே கணப்பொழுதில்!
மோதுண்டு மரணித்த தாயும்!
குருதிக்கோடுகளைச்!
சிரசில் ஏந்தி,!
லேசான புன்னகையை!
முகத்தில் கொண்டு!
பெற்றவளின் !
கரத்திலிருந்திறந்த!
கைக்குழந்தையும்!
என்னுள்ளத்தைச்!
சிலுவையிலறைந்தனர் !!
நம்பவைத்து நயவஞ்சகனாகிய !
நண்பனும்,!
உரிமையெடுத்து உருக்குலைத்த !
உறவினரும்!
என்மனதைக் கழற்றியெடுத்துக்!
கூர்ஈட்டி குத்திக்!
கொடூரவதை செய்தனர் !!
புராணக்கதைகளில் போல!
படைத்தவன் முன் தோன்றி!
வரம் தரக்கேட்பானெனின்,!
செத்துப்பிழைக்க-எனக்குப் பல!
இதயங்கள் வேண்டுமென்பேன்...!
இல்லையெனில்-உடம்புக்குப்!
பாரமெனினும்,!
எதையும் தாங்கும்!
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!!
!
- எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை
எம்.ரிஷான் ஷெரீப்