நீயும் நானும்!
நம்மிடையே நிகழ்ந்த நிகழ்வொன்றில்!
ஐந்து தலை நாகமொன்று!
நிரம்பிக்கொண்டது இடை....வெளியை.!
உன்னுடையது என்று நானும்!
என்னுடையது என்று நீயும்!
தனித்தனியே விலகிக்கொண்டோம்!
நான் விட்டு சென்ற ஆளுமையையும்!
நீ தெளித்து சென்ற அலட்சியத்தையும்!
விழுங்கி செழித்தது!
மாறிமாறி பழிச்சொன்ன சொற்கள்!
உற்சாககபானமானது!
ஒரு பின்மாலையில் !
நகர பற்களிலிருந்து பிதுங்கி ஒரு சேர!
வந்தபோது அறையில் நிரம்பி தளும்பிய!
ஆலகால விஷத்தில் மூழ்கிபோனோம்.!
சில நாட்களாகவே!
நாமிருவரையும் காணவில்லை
வேல் கண்ணன்