பூமிப்பிளவு
காவிரிக்கரையோன்
கண்ணிமைக்கும் நேரத்தில் பிளந்தது !
பூமி, பூங்காவை வெறித்து பார்த்த என்னையும் !
என் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறுமியையும்!
பார்க்காமல்,!
பிளந்த பூமியின் அடித்தளம் எப்படியிருக்கும்!
என்ற சிறுமியின் கேள்விக்கு என்ன விடை!
சொல்வதென்றே தெரியாமல் பயணப்பட்டிருந்தேன்!
பூமியின் பிளவுக்குள்,!
பன்னெடுங்காலமாய் கூட்டல் கழித்தலில் தேர்ந்த!
ஆசிரியர் ஒருவரும், நிலத்தை நம்பியே வேலை !
கொடுத்தும் கெடுத்தும் வந்த பெரிய நிலத்தரகர்!
ஒருவரும் எங்களுக்கு பக்கத்தில் வந்து கொண்டிருந்தனர்,!
பூமிக்கடியில் ஆழ்துளை கிணறு ஒன்று வைத்தால் நல்ல !
லாபமென்று அவரும், பூமியின் கடைசி நிறுத்தத்திற்கு செல்ல!
இன்னும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்று ஆசிரியரும் !
கணக்கு போட்ட படியே வந்தனர்,!
சிறுமிக்கு விடை என்ன சொல்வது என்று விழித்துக் !
கொண்டே இருள் படர்ந்த பூமிப் பிளவில் சென்று!
கொண்டிருந்தேன் நான், அட ஏதாவது ஓர் இடத்தில் நிற்க!
வேண்டுமே என்ற ஐயம் வேறு என்னை சூழ்ந்தது,!
சட்டென்று சிறுமி கேட்டாள் பூமிக்கடியில் எனக்கு வைத்து!
விளையாட ஒரு நாய்குட்டியும், ஒரு குரங்கு பொம்மையும்,!
ஒரே ஒரு தட்டும் வேண்டும் என்று கண்களில் நீர் !
பனிக்க கூறினாள்,!
வாங்கிக் கொடுக்கிறேன் என்று திரும்புகையில் ஒருவரையும்!
காணவில்லை, பூமியின் பிளவும் இல்லை, மின்விசிறி சத்தமும்!
இருளும் என் போர்வையும் கூட இருந்தன,!
என் மனதில் இருள் சூழ்ந்தது, சிறுமிக்கு என்னவாகியிருக்கும்!
நிலத்தரகர் கிணறு வெட்டியிருப்பாரா? ஆசிரியரின் விடையில் !
சிறுமிக்கு விடை சொல்லியிருப்பேனே, பொம்மைகள் இருக்குமா?!
மீண்டும் அதே பூங்காவை நோக்கி பயணித்தேன்!
விட்டு வந்த வேலைகள் பார்க்க