ஆடலி ஆடலி என்றேன்!
கோபுரத்தில் ஒலித்த குரல்!
திசைகளில் பெயர்ந்து காற்றாயிற்று. !
வானத்தில் மிஞ்சிய கிளையில் !
நடனமிடும் சிட்டைக் காணுந்தோறும் !
கண்கள் பனிக்கிறது ,!
நீ வருகிறாய் நினைவாய்.!
ஆடலி என்றேன்!
பூக்கள் மலர்ந்தன!
நிறங்களாய் ஆனதிவ் வுலகம்!
நெய்த கனவில் !
நீ கரையும் ஓவியமாய் ...!
ஆடலி ஆடலி என்றழைக்குமென் குரல்!
தாகம் பெயர்க்கும் கோடையாயிற்றா ? !
ஆடலி ஆடலி !
நீ மழையல்லவா !
நடனமிடும் மழையல்லவா!
ஆயினுமே னிந்தக் கோடை இன்னும் ?

வெளிவாசல்பாலன்