எனக்கெனப் பிறந்தவனே என்னுள்ளே கலந்தவனே!
எல்லையில்லா இன்பங்கள் எனக்களித்து நின்றவனே!
எனைப் பிரிந்து ஏன் சென்றாய்- உன்னுடனே!
என் உயிரையும் பிரித்து ஏன் சென்றாய்!
காதல் விதை விதைத்தாய் பாச நீரூற்றினாய்!
கதைகள் பல பேசிப்பேசி களிப்பூட்டினாய்!
இரவெல்லாம் விழித்திருந்து காதல் விருந்தளித்தாய்!
விடிவெள்ளி காலிக்க விரைந்து விடை பெற்றாய்!
விதை வளர்ந்து மரமாகி, மொட்டாகி, பூவாகி,!
பிஞ்சாகி, காயாகி, கனிந்து வரும் வேளையிலே!
விதியது வந்ததோ வேரினைக் களைந்திட!
அறுவடைக்கு முன்னரே அழிந்தன அத்தனையும்!!!
பாதைகள் தடம் மாறி, பயணங்கள் வேறாகி,!
வாழ்க்கையும் தனித்தனி என்றாகி- இன்றோ!
நீ எனது சொந்தமில்லை; நான் உனது உரிமையில்லை;!
உயிர் மட்டும் உன்னுடைய உயிலாக இருக்கின்றது!
நீ வளர்த்த காதல் மரம் என்னுள்ளே- சொந்தமாய்!
சுகமாய், உரிமையாய் வியாபித்திருக்க!
அந்நிழலில் தேடுகிறேன் அமைதியினை நான் இன்று !
என்னுயிரை எந்நாளும் உன் காதல் வாழ வைக்கும்!!!!!
வரதப்பிரியை