தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அந்த இரவை போல்

வி. பிச்சுமணி
நிலவு கிணற்றில் !
ஒளிநீரை !
அரை மாதங்களாய் !
இரைத்து இரைத்து !
தூர்த்து அம்மாவாசையில்!
வெளியே !
குதித்த வீன்மீன்கள்!
சிம்னிவிளக்குகள் போல் !
துயில்கின்றன !
நீ எனை பிரிந்த !
அந்த இரவை போல்

அம்மா

s.உமா
எனது பிறந்த நாள்!
உனக்கானது..!
வலி பொறுத்து!
எனை!
மடி தாங்கி!
மாதங்கள்!
வருடங்கள்!
ஓடிவிட்டன....!
எத்தனையோ தூரங்கள்!
நாங்கள்!
கடந்தலும்!
எங்களின்!
முதலடியை!
எடுத்துவைத்தவள் நீ!
எங்களுக்கு!
முகவரி தந்தவளும் நீ...!
உன் உயிர்!
குடித்தே!
எங்களின்!
வாழ்நாள் கணக்கு!
துவங்கியது..!
உன்!
ஆசைகளை!
கனவுகளை!
கொண்டே!
எங்கள் பயணத்திற்கு!
பாதை வகுத்தாய்...!
முட்களையும்!
மலராக்கும்!
வித்தை தெரிந்திருந்தாய்...!
உன் காயங்களை!
எங்களின் பாதையில்!
எச்சரிக்கை பலகையாக்கினாய்...!
உன்!
உழைப்பை!
விடா முயற்சியை!
தன்னம்பிக்கையை!
எங்கள் பாதையில்!
வெளிச்சம் தரும்!
விளக்குகளாக்கினாய்...!
எங்கள் சிறகுகள் விரிய!
நீ வானம் ஆனாய்...!
ஒருபுறம் வெப்பம் தாங்கி!
மறுபுறம் நிழல் தந்து!
நிற்கும் விரூட்சம்...!
ஏற்றிவிட்டு!
அமைதியாய்!
நின்றிருக்கும் ஏணி...!
வாசம் தந்து!
வாடும் மலர்...!
சுவாசம் தந்து!
வீசும் காற்று....!
இப்படி எத்தனையோ!
விஷயங்கள்!
நினைவூட்டும்!
உனக்கான என்!
கடமையை....!
இனி!
மாற வேண்டும் அம்மா..!
நீ!
என் மகளாக...!
என் மடித்தூங்கி!
உன்!
கவலை மற..!
என் கைபிடித்து!
காலடி!
எடுத்துவை..!
நீ கொடுத்த!
அமுதம்!
என்!
கண்ணில் நீராய்...!
நீ கற்றுத்தந்த!
தமிழ்!
கொண்டு!
ஒரு கவிதை மலர்!
உன் காலடியில்...!
ஆசிர்வதி அம்மா..!
இன்றெனது பிறந்தநாள்!
இனிமை கொள் அம்மா!
என் பிறந்த நாள்!
உனக்கானது!
வலி பொறுத்து!
எனை!
மடிதாங்கி!
மாதங்கள்!
வருடங்கள்!
ஓடிவிட்டன...!
-உமா

அகதிகள்

கோகுலன். ஈழம்
அகதிகள்.!
யார் இவர்கள்?!
அலையின் சருகடிப்பில்!
ஒதுக்கப்பட்ட கரை ஒதுங்கிகளா?!
விதியால் எறியப்பட்ட!
மிச்சத்துண்டுகளா?!
உயிர் சுமந்த!
பிணங்களா?!
குளில் கால மரங்களாய்!
இலை உலுப்பி!
என்புகள் தெரிய!
நிர்வாணக்கோலமிடும்!
குழந்தை வயோதிபமா?!
நடுக்கடல்......!
கொள் கலன்......!
உச்சிப்பனிமலை......!
பாதி விழித்து!
மீதி இறந்து!
குற்றுயிராகி!
நாடு கடந்து......!
அன்னிய தேசத்து!
ஆழ்துழை சிறைகளில்!
நினைவுகளை கசக்கி கசக்கி!
ஏதோ ஓர் மூலையில்!
மொட்டை அடித்த பிண்டங்களாய்......!
முகமறியா மூதாதையுடன்!
சில வேளை கடவுளுடன்!
காலம் கடத்தியும்!
கடத்திக்கொண்டும்!
குருதி உறிஞ்சிகளின்!
ஊர்வலத்தில்!
இன்னும்......!
தேசம் கடந்தும்?!
தேசத்திற்குள்ளும்?!
ஏக்கப்பெரு மூச்சில்!
இதயம் கனக்கிறது.!
--கோகுலன்.!
ஈழம்

மாறாத தீர்ப்புகள்

இரா. தாமரைச் செல்வன், சேலம்
இன்னும் எத்தனையோ!
தீர்ப்புகள் எழுதப்படாமல்....!
கட்டிலுக்கும் சமயலறைக்கும்!
மட்டுமே காவலாய்......!
கூடவே!
கைக்குட்டை முதல்!
சுவர் கடிகாரம் வரையிலான!
கவன ஈர்ப்பு தீர்மானத்தில்!
கட்டாய வெளியேற்றம்....!
கையில் குழந்தையும்!
கண்ணில் நீருமாய்!
கரைந்தோடும் வாழ்க்கை.....!
மணமேடை ஏறும் வரை!
கட்டிய கோட்டைகள்!
கண்முன்பே சுக்கு நூறாய்.....!
நிலவுக்கு போய் வரும்!
பெண்களுக்கு இடையில்!
நீர் எடுக்க போகவும்!
நிறைய கட்டுப்பாடுகள்....!
தீர்ப்புகளை மாற்றி எழுத!
நாட்டாமைகள் இல்லை....!
இன்னும் இவர்கள்!
வீட்டு ஆமைகளாகவே

எல்லைகளற்றது

ரேவா
அந்திவானம் !
அத்தனை அழகில்லை !
இதுவரை !
வரையறை வைத்து !
வரைந்திட்ட வாழ்வில் !
வர்ணம் கொண்டு !
புதுவர்ணம் கொடுத்தாய் !
உயிர்கிளியின் கூண்டுகள் தன்னை !
வான்நோக்கி பறந்திட !
திறந்திட்டாய் !
சிறகசைப்பின் வெகுதூரக்கவனிப்பில் !
வந்துசேர கிடைத்திட்ட இடமதில் !
சலசலக்கிற ஆறும் !
சந்தமாய் பேசும் காடும் !
மெளனமாய் உனை என்னிடம் சேர்க்க !
அடர்ந்திருக்கும் இவ்வானில் !
பார்க்க கிடைக்கும் !
முழு நிலவும் !
மடிகொடுத்து !
உனை நிறைக்க !
நீ அருகிருக்கும்!
அந்திவானம் !
அத்தனை அழகில்லை !
இதுவரை.... !

எழில் கொஞ்சும்.. நெஞ்சில்.. பிரிவின்

கிரிகாசன்
எழில் கொஞ்சும் ஈழம்.. நெஞ்சில் ஒரு முள்ளாக.. பிரிவின் சோகம்!!
01.!
எழில் கொஞ்சும் ஈழம்!
-------------------------------!
பச்சை வயல் வெளிக் காற்று கதிர்களில்!
பட்டு மேனி தொட்டு ஓடும்!
சச்சச் சலவெனச் சத்தமிட்டே நாணி!
சற்றுக் குனிந்துநெல் ஆடும்!
அச்சச்சோ பாரடிஎன்று குருவிகள்!
ஆலோலம் பாடிப் பறக்கும்!
இச்சை தருமெழில் இன்பம்நிறைமணி!
ஈழமென்னும் தமிழ்த் தேசம்!
மெச்சுமெழில் நெற்றி பொட்டும் வியர்வைக்கு!
மேனியில் முத்துக்கள் தோன்ற!
உச்சி வெயிலினில் நின்று வெட்டிக்கதிர்!
ஓர மடுக்கிடும் பெண்கள்!
மச்சவிழி கணை மார்பி லெறிந்திட!
மையலுறு இள மைந்தர்!
இச்சையுடன் கதிர்கட்டி ஏற்றிவண்டி!
இன்பங்கொளும் ஈழதேசம்!
கட்டைவண்டிதனில் காளை சலங்கைக்கு!
கால்கள் தாளமிட ஓடும்!
வட்டமடித்தோடி வள்ளென நாய்களும்!
விட்டுத் துரத்திடக் காணும்!
பட்டணிந்து சிறுதம்பிகள் தங்கையர்!
பெற்றவர் கைபிடித் தேகும்!
எட்ட இருந்திடும் கோவில் குளமென!
ஈழதேசம் எழில்காணும்!
நெட்டைப் பனைமரம் நிற்க அதன்பின்னே!
நீலவிண்ணில் முகிலோடும்!
தொட்டுவிட வானத்தூர முயர்கோவிற்!
தொங்கு மணிநாதம் கேட்கும்!
வட்டகுளத்தினில் வானச் சுடர்கண்டு!
வண்ண மலர் தலையாட்டும்!
பட்டுசிறகுடன் பற்பல வண்ணத்துப்!
பூச்சிகள் தேனுண்ண நாடும்!
எட்டிக்குதித் தலை மீதெழுந்து துள்ளும்!
ஏந்திழை கண்ணென மீனும்!
கொட்டிக் கிடந்தெழில் கொஞ்சும் சுனைதனில்!
ஒட்டிக்குளிர்த் தென்றல் வீசும்!
தொட்டது மேகமென்றே வளர்ந்தே யுயர்!
தென்னைகளில் இளநீரும்!
சுட்ட வெயிலுக்குத்தாகம் தணித்திடும்!
சூழல்கொள் ஈழ மெம்நாடு!
நீள அலை விரித்தாடும் கடலதில்!
நெய்குழல் மங்கையர் போலும்!
ஆழமனதினில் ஆயிரம் எண்ணங்கள்!
அத்தனையும் மறைத்தாடும்!
மூழ்கிஎழுந்திட முத்துக்கள் சிப்பியில்!
மூடிவைத்த குவை தேறும்!
தோள்விரி மைந்தரும்தீரமுடன் கப்பல்!
தோணிகள் ஓட்டிடும் தேசம்!
வாழைக் கனிகொண்டு வானரங்கள்கிளை!
தாவி மரந்தனில் ஏறும்!
வேளைதனில் கனிமாவின் சுவைகண்டு!
விட்டு ஒருஅணிலோடும்!
கீழை மரக்கொப்பில் காணும்பலாக்கனி!
கோதிகிளி யொன்று பேசும்!
காளை ஒன்றுஅதன் கீழிருந்து அம்மா!
காணென்று யாரையோ தேடும்!
பூவிரி சோலைகள் பூம்பொழில் நீர்ச்சுனை!
புல்விரிந்த பசும்தேசம்!
தேவரின் வானுல கானது தோற்றிடும்!
தீந்தமி ழீழம் எம்தேசம்!
தீயெரிந் தேசுடு காடென மாறிடச்!
சிங்களமே பழியாகும்!
போய் விரிந்தே விதிபோடும் கணக்கது!
பாதைமாறித் தெற்கும் சேரும்!
காலமெனும் சுழல் சக்கரமானது!
கீழும் மேலும் நிலைமாறும்!
ஞாலம் சுழன்றிட நாளு மிரவுடன்!
காலை பகல் என்றுஆகும்!
கோலம் அவரது கொண்டது மாறியே!
கூடி யழுதிட நேரும்!
சீலமுடன் நம்ம தேசமமைந்திட!
சேரும் வளங்களோ மீளும்!
02.!
நெஞ்சில் ஒரு முள்ளாக...!
----------------------------------------!
கலைந்தாடுங் கருங்குழலோ கரைவதன மருவ!
அலைந்தாடு கடலின்திரை யன்னவளை யுடலும்!
வலையூடு துடிகயலின் வடிவமெடு விழியும்!
குலைந்தோடு முகிலினிடை குலவுமதி யானள்!
சரிந்தாடு தோகைமயில் சரசமிடு நடையும்!
எரிந்தாறும் சுடுகதிரின் ஒளிகொள் ளிருவிழியும்!
வரிந்தாலும் விளைஉடலின் வளமழியா மதமும்!
சொரிந்தாடும் பழமுதிர்ந்த சோலையென நின்றாள்!
வளர்ந்தாலும் சிறுவயதின் வாய்மொழியின் குளுமை!
குளிர்ந்தாடும் அலைவாவி கொண்டமலர் நளினம்!
வெளிர்தா மரை மலரில் வீற்றிருக்கும் தேவி!
துளிர் மேனிஅவள்அழகை தோற்று விடச்செய்தாள்!
எழுந்தாடும் பருவமதன் இயல்பதனைக் கண்டு!
பழுத்தாடும் மாங்கனியை பார்த்த கிளியென்று!
எழுத்தோடு அடங்காத எழில்வண்ணம் தன்னை!
முழு(த்)தாகஅடைந்து விட மன ஆசை கொண்டேன்!
பளிங்கான சிலை எந்தன் பார்வைதனைக் கண்டாள்!
செழித்தாடும் சோலைமலர் சேரும் கருவண்டாய்!
களித்தாடி அவளருகில் காணவென விழைய!
நெளித்தேநல் லிதழ்வழியே நெஞ்சுறையச் சொன்னாள்!
அண்ணா நீர்நல்லவரென் றறிவேன்சற்றுதவும்!
கண்ணாளன் காதல்மனங் கவர்ந்தவனாம் அங்கே!
எண்ணாது நிற்குமவன் என்காதல் அறியான்!
பெண்ணாம் இவள் நிலையைப் பேச வழி சொல்லும்!
கைநீட்டுதிசையில் அவன் காளைதனைக் கண்டேன்!
மெய் தடித்து மேனி உரம் மிடுக்கோடுநின்றான்!
பொய்யுரைக்க வில்லை அவன் புறமேனிஅழகே!
செய்வதெது அறியாது சேவை எனதென்றேன்!
நெஞ்சோடு சிறுவாளை நீட்டி உடல்செருகி!
பஞ்சாகி வான்பறக்க பாவிமனம் கொன்று!
நஞ்சோடு அமுதூட்டும் நாடகமும் ஆடி!
அஞ்சோடு அறிவிழந் தாகஎனை அழித்தாள்!
03.!
பிரிவின் சோகம்! !
-------------------------!
(மணம் முடித்து கொடுத்ததும் மகளின் பிரிவால் வாடும் தந்தை)!
தென்றல் அருகினில் ஓடி வந்து என்னை!
தீண்டி உரைத்ததும் என்ன? - அவள்!
நின்ற திசைதனில் நேரிருந்து கண்ட!
நேசக்கதைகளைச் சொல்ல - சிறு!
கன்றென ஏதும் பயமறியா துள்ளி!
கன்னிஅவள் கொண்ட சின்ன - உளம்!
இன்று என்னபடும் பாடென எண்ணியே!
ஏங்கும் தந்தைமனம் தேற்ற!!
வந்து தழுவிய வாசமலர் மணம்!
வாடும் எனதுடல் தேறி - இன்பம்!
தந்து விலகியபோது அவள் எண்ணம்!
தாவி எழுந்தது மீள - உயர்!
சந்தனமாய் இல்லம் எங்கும் மணத்தவள்!
சிந்துகவியெனச் சொல்லும் - குரல்!
விந்தையின்று வெறும் வெட்டவெளியென!
வேடிக்கையானது கொல்ல!!
கைவிரல் பற்றியே கட்டழகன் மீது!
காதல்கொண்டாளெனக் கண்டேன் - அவள்!
மைவிழிகண்டு மயக்கியவன் என்ன!
மாயம் புரிந்தனன் என்றேன் - இவள்!
மெய்யுடல் பெற்றவன் மீது கொண்ட உயிர்!
மெல்லகரைந்ததும் ஏனோ?- அவன்!
மையலிலே இந்த மான்,கிளி, பூங்குயில்!
மாறிக்குணம் கொள்ளலாமோ!
கண்கள் குளமென ஆகிடவே இங்கு!
காணுகின்றேன் ஒரு ஓரம் - சிறு!
பெண்ணவள் அன்னையும் பேசமறந்துமே!
போனதுமோ வெகு தூரம் இதை!
எண்ணிக் கலங்குவ தாகுமோ என்மகள்!
ஏற்ற துணை கொள்ளல் தீதோ -ஒரு!
வெண்ணிலவு வெறும் வானமதில் என!
வீட்டினுள் காய்திட லாமோ!
!
நேற்று மலர்ந்தவள் நேசமுடையவன்!
நேரெதிரே வரும்போது -மன!
மாற்றமடைந்தவன் மேலே மயங்கிடும்!
மாயம்தனை மனமெண்ணி - வரும்!
ஆற்றாமை பொங்கிட அஞ்சிநின்றேன் ஒரு!
அந்தி வந்த பொழுதோடு - அந்த!
வேற்று மனிதனை வேண்டி எனை விட்டு!
வேக நடை கொண்ட தேனோ?!
ஓடும் நதியென தானிருந்தாள் துள்ளி!
ஓசையுட னில்லம் நின்றாள் - அவள்!
கூடும்கடல்தனை உள்ளங்கொண்டாள் எனக்!
கொஞ்சமறியாது நின்றேன் - தினம்!
ஆடும் உலகதில் நாமறியோ மிது!
அத்தனை உறுதி என்றேன் -அது!
போடும் புவிஅதிர்வோடு குலுங்கிட!
பூமி சுழல் கின்ற தென்றேன்!
யாவும் எமதென இல்லையம்மா இந்த!
ஆவியும் சொந்தமென் றல்லேன் உயிர்!
தாவும் உடல்பிரிந் தோடிட மேனியும்!
தீயின் சொந்தம் எமதில்லை - ஒரு!
பூவும் கொடிசொந்தமில்லையம்மா - இந்தப்!
பூமியும் எம்மது இல்லை அந்த!
மேவும் வெளி உயர் மேகமலைந்திடும்!
வானமும் சொந்தமா? அறியேன்

மழை

ராசை நேத்திரன்
திடும் என கண் !
விழிக்கிறாய் !
ஒன்று இரண்டு நீர் !
துளிகள் ஒற்றுமை !
காட்டி பேர் இடியுடன் !
உயிர் பெருகிறாய் !
தாங்கி சென்ற மேகம் !
கரைகிறதே பூமியில் !
நீண்ட வானம் உன்னை !
தாங்கி சற்று முன் தான் !
அமைதியாய், !
உன்னை !
தீண்டிய வாலிபன் யார் !
இப்படி கொட்டி தீர்க்கிறாய் !
நீ அழுவதாய் எண்ணி !
கொண்டாலும் அழகாய் !
தான் இருக்கிறது, !
இருள் நீங்கி ஒளி !
பெரும் மேகம் !
மழை நீங்கி மகிழ்கிறதே, !
வானம் இடம் கொடுப்பதால் !
அதுவே உன் தந்தை, !
தென்றல் உன்னை தீண்டிய !
பின் நீ பொழிவதால் அதுவே !
உன் தாய், !
நீ துள்ளி குதித்து ஓடி மறைவதால் !
மலை உன் தமையன்,!
உன்னை அரவணைத்து தாங்கி !
கொள்வதால் ஆறு உன் தங்கை, !
நீ ஓடிய பின் கடலில் சங்கமிப்பதால் !
காதலின் ஊடல் பொருந்திய இவ்விடம் !
உனக்கு புகுந்த வீடு,!
நீ அனைத்து உயிர்களையும் !
உயிர்ப்பதால் பொதுவாய் நீ !
கடவுள் .... !
வானத்தில் பிறந்து கடலில் புகுந்து !
கரைதேடி கரையும் உன் வாழ்க்கையும் !
பாடமாய் உணர்கிறேன

வன்னி 2008 / 9

செம்மதி
சமாதான காலத்தில்!
தார் பூசப்பட்ட!
சிதைந்த வீதிகள்!
பயணிக்க முடியாதவாறு!
படை களற்றுகின்றன!
அதிகாரங்களின்!
போலி முகங்கள் போல்!
!
கூவிவரும்!
றிகணைக்குப் பயந்து!
ஓடி ஓடி!
குறை மாதத்தில்!
குழந்தை பெறுகிறாள்!
கற்பினி ஒருத்தி!
தெரு வோர மரத்தடியில்!
சேலை மறைவில்!
கணவன்!
எறிகணைக்குப் பலியானான்!
!
குழந்தைகளை!
காப்பாற்றுவதாய் வரும்!
கிபிர் விமானங்களின்!
இரச்சல் கேட்டு பயந்து!
சிதறி ஓடும் சிறுவர்கள்!
அடுக்ககணம்!
அடையாளம் காணப்பட்ட!
இலக்காகிப் போகிறது!
பிள்ளைகளின்!
கல்விக் கூடம்!
!
தண்ணி முறிப்பில்!
விளைந்த கதிரை!
அறுப்பதற்காய்சென்றவரின்!
தலை அறுத்துப்போகிறது!
பல்குழல் பிரங்கியின்!
எறிகணைகள்!
மல்லாவியில்!
முழங்காவில்லில்!
விளைந்தவற்றை வந்தவர்கள்!
அள்ளிச்செல்வதாய்!
குமுறுகின்றார்கள்!
விவசாயிகள்!
பசித்த வயிற்றுடன்!
!
முன்ணுறு ரூபா!
மண்னெண்ணையிலும்!
மனித சுவாசத்திலும்!
கைத்தபடி இயங்கும்!
மோட்டார் சைக்கிள்கள்!
வீட்டுப் பொருட்களை!
மலை போல் ஏற்றி!
பண்டிவிரச்சானில் இருந்து!
பத்தாவது இடம் தேடி!
அலைந்து திரிகிறது!
!
எலும்புக் கூடுகளாய்!
வேயாது சிதறிக் கிடக்கும்!
கொட்டில்களுக்குள்!
எலும்பும் தோலுமாய்!
அகதி மக்கள்!
நிவாரண வண்டிகளுக்காக!
இன்றும் பசித்த வயிற்றுடன்!
!
காத்திருப்புத்கள்!
தொடாகின்றன....!
!
-செம்மதி

கோபம்

உமர் அலி
முதுமைக்கு !
விரைவாகவே!
வரவேற்பு விழா நடத்தத்!
துடிக்கின்ற !
துடிப்பான இழைஞன்!!
மானிடத்தை !
மடத்தனத்தீவுக்கு!
கொண்டுசெல்லும் !
மரக்கலம்!!
எதிரிகளை!
கூட்டி கொள்ள!
நீ திறந்த கதவு!!
குறை காணுவதே !
உன் குறை !
என்று கூறியதால்!
உனக்குள் !
குதிக்கின்ற உணர்வு!
உப்புத்தின்றால் !
கூடுமென்று யாரோ !
சப்பையாகச்சொன்னது!
ஞாபகம்!!
உன்!
உறவுகளை சிதைக்கின்ற !
வன் அமிலம்!
அது!
இதயங்களை !
கிழித்து!
உதயமாகும் கண்ணீரை !
ரசிக்கின்ற காட்டேரி!!
பொறுமை என்ற !
பாடத்தை இன்னும்!
படிக்காத முட்டாள்!!
மிருகங்கள் உறுமுவது!
இரைக்காக!
நீ முறுகுவது !
எதற்காக?!
சந்தோஷ விருட்சத்தை!
படிப்படியாய் !
அரித்து!
அடியோடு !
சரிக்கும் சந்தர்ப்பக் !
கறையான்!!
நீ அடிக்கடி !
முகம் சுளிப்பதால்!
முக நரம்புகளை !
விரைவில் !
களைக்க வைக்கும்!!
ஆகவே நீ ............!
நில் !
நிதானி!
யோசி !
ஆழமாக சுவாசி !
ஆசுவாசப்படு!!
உதிரமடங்கும்!
உணர்வு தணியும்!
நரம்பு தளரும் !
புன்னகை மலரும் !
சந்தோசம் மொட்டுவிட்டு !
வாழ்வே நந்தவனமாகும்!
நறுமணம் பரவும்!
உறவுகள் பெருகும்!!
முகமும் சிரிக்கும் !
ஆதலால் !
மனிதா நீ!
கோபப்படாதே!
கோபிக்க நடக்காதே

கலப்படத்தின் உச்சகட்டம்

சித. அருணாசலம்
மாறுவேடப் போட்டி வைத்தால்!
முதல்பரிசு நிச்சயம்,!
மிளகு வேடம் பூண்ட!
பப்பாளி விதைக்கு.!
அகலிகையைப் போல்!
சாபவிமோசனம் பெற்று!
அரிசிகளாய்க் கற்களின் அவதாரம்.!
சிவப்பாக இருப்பதாலே!
செங்கல் தூளுக்கு!
‘மிளகாய்ப்பொடி’ உயர்பதவி - இப்படி!
ஒன்று வாங்கினால்!
ஒன்று இலவசமென!
உடல் உபாதைகளுக்கு!
உடன் வழிவகுக்கலாமா?!
இரசாயணக் குவியலால்!
இமயமான நோய்களுடன்!
இன்னமும் சேர்க்கலாமா?!
-சித. அருணாசலம்