01.!
அன்னை!
---------------!
நான் கண் விழிக்க!
உன் முகம் வேண்டும்!
நான் படுத்துறங்க!
உன் மடி வேண்டும்!
என் அதிகாலைச் சூரியன்!
உனக்கான விடியல்கள்!
என்னுடைய பொழுதுகள்!
உன்னில் கரைய வேண்டும்!
உன் சுவாசம்!
என் நுகர்ச்சிக்காக!
என் நுகர்ச்சி!
உன் இதயத்திற்காக!
நான் பசித்திருக்கையில்!
நீ விழித்திருப்பாய்!
நான் விழித்திருக்கையில்!
நீ பசித்திருப்பாய்!
உன் பாசம்!
வார்த்தைகளில் வெளிப்படுவதில்லை!
வார்த்தைகளில் வெளிப்பட அது!
பாசம் மட்டுமல்ல!
02.!
பால்யகால சினேகிதி!
------------------------------!
பதிந்துவிட்ட சுவடாய்!
உனது முகம்!!
பாச வலை பின்னும்!
உனது கண்கள்!!
மலரினும் மெல்லிய!
உனது இதழ்கள்!!
என் கண்ணீர்த் துளிகளில்!
கரைந்த உனது விரல்கள்!!
என் இதையம் திருடும்!
உனது இளமை!!
உதயமாகிய என் சூரியனை!
உருக வைத்த உனது நினைவுகள்!
மௌனத்தில் தொலைந்த!
நம் காதல்!!
இவையனைத்தும்!
பகற்கனவாய் போனாலும்!
நீ மட்டும் என்றும்!
பசுமை நினைவுகளாய்
க. பழனிவேல், ஜெயங்கொண்ட சோழபுரம்