அன்புக்கு அம்மாவாய்!
பசுவாய்.!
பொறுமைக்கு பூமியாய்.!
அறிவுரைக்கு ஆசானாய்!
தோழமைக்கு தந்தையாய்!
தோழனாய்.!
வாய்மைக்கு அரிச்சந்திரனாய்!
மென்மைக்கு பூவாய்!
சிரிப்பிற்கு மோனாலிசாவாய்!
நிழலுக்கு ஆலமரமாய்!
சாய்ந்து நிற்பதற்கு தூணாய்!
பிறர் சீண்டும் போது சுட்டெரிக்கும்!
சூரியனாய்.!
கவிக்கு பாரதியாய்!
பேச்சுக்கு புலவனாய்!
பிடிவாததிற்கு குழந்தையாய்!
கண்டிப்புக்கு அண்ணாவாய்!
தம்பியாய்.!
கண்ணீர் விடும் போது!
அணைக்கும் தோழியாய்.!
சேவைக்கு அன்னை!
தெரேசாவாய்.!
கொடைக்கு பாரியாய்!
அழகுக்கு மயிலாய் இல்லை !
குயிலாய்.!
சுறு சுறுப்பிற்கு எறும்பாய்!
சமாதானத்துக்கு புறாவாய்!
இன்று போல் என்றும் மது!
அருந்தாத தேனியாய்!
மழை நீரை மட்டுமே குடித்து!
வாழும் சக்கரவாக பறவையாய்.!
அடுத்தவர் துயர் கண்டால்!
சாம்பல் மேட்டில் இருந்து!
வரும் பீனிக்ஸ் பறவையாய்!
இல்லை எனில் என்றும்!
பௌர்ணமி நிலவாய்.!
காதலுக்கு இராமனாய் வேணாம்!
சாஜகானாய் வேணாம்...!
சக புரிந்துணர்வுள்ள மனிதனாய்!
மட்டும் இருந்து விடு!
அது போதும் எனக்கு இப்பிறப்பில்

பூரணி