ஞாலத்தின் மாமேதையே!!
ஞாயிறென நடமாடும் ஜோதியே!!
காலத்தால் அழியாத காவியமே - தங்கள்!
கால் பணிந்து பாடுகிறேன் கவிதை...!
காலையில் சுருங்கிய படுக்கையாய்;,!
கசங்கிக் கிடக்குது நம் பூமி.!
நாளை மாறும் நம்பிக்கை உண்டு,!
நல்லோர் உம் விழிகள் கண்டு!
எழுதுகிறேன் என் உணர்வை....!!
விரல்களால் வேலி போடுவோம்!
விளக்கெனும் வல்லமை ஜோதிக்கு - உம்!
அருளால், அத்தீப சுடரால் - நம்!
அகிலம் நடைபோடும் அப்பாதைக்கு!!
சூரியன் கிழக்கே வரமறுத்தால்!
சுதந்திர இந்தியாவுக்கு ஏது விடியல்?!
பாரினிலோர் நல்லிடத்தை நம் பாரதம்!
பாராமல் இறக்கமாட்டேன் இம்மண்மடியில்!!
ஈராயிரத்து இருபதுவரை பொறுக்கலாமா?!
ஈங்கிருந்தே சாதிக்கப் புறப்படுவோம் - நம்முள்!
ஓராயிரம் அப்துல்கலாம் இருப்பதனால்!
ஒளி மங்கிய வல்லரசில் ஒளியேற்றிடுவோம்!!
சிகரத்தின் மறு பெயர் உச்சிமலையே - அதில்!
இன்னொரு சிகரம் நம் உச்சந்தலையே!!
'அ கரமே முதலெழுத்து போலும் - நம்!
அகிலம் வெல்ல வெகுதூரமில்லை அந்நாளும்!!
தலையொன்றுக்கு ஐந்தாயிரம் வேண்டுமாம்!
தரணி வங்கியில் நம் கடனொழிய - நம்!
கலை நட்சத்திங்கள் வருமானால் கோடிகளுண்டு - அதில்!
கர்ணன்மார்கள் யாருண்டு?!
இருந்தும்....!
உலைக் குமிழ்களுக்கு மூடியிட்டாலும் அதன்!
உத்வேக முயற்சியால்; முட்டித்திறக்கும்!
இளைய வருகையின் இனிய துணையால்!
இந்தியா வல்லரசாகும் நாள் பிறக்கும்!!
துணிவினை மனதில் கொள்வோம் - எல்லா!
துறைகளிலும் வெல்வோம்!
இனி வறுமை ஒழிந்து போகும்!
இந்தியா வல்லரசாகும்
வைரபாரதி