இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை!
படைப்பாக்கும் உயர்கலை!
உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட!
கிடைக்குமோ தூரிகை!
மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை!
கொஞ்சல் சிணுங்கல்களை!
கொலுசொலியின் லயங்களை!
இசைக்கோர்வை அமைக்க!
இல்லையடியெனக்கு இசைஞானம்!
விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு!
படிமங்கள் தேடுகிறேன்!
முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம்!
எதன் குறியீடென்று!
ஆராய்கிறேன் தனிமைகளில்!
மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க!
ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான்!
இதழ்கவ்வும் தருணங்களில் கசியும்!
கேவல் விம்மல்களுக்கு!
இசையாகும் வாய்ப்புமுண்டு!
சாத்தியம்தான் இவையனைத்துங்கூட!
விடைபெறும்போது வெளியிடும்!
ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த!
கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க!
திரிந்தலைகிறேன்!
உலக மொழிகளின் காடுகளில்!
!
000000
அன்பாதவன்