இனியவனே...!
ஆசையோடுதானிருந்தேன்!
என் நேசத்தைச்சொல்ல!
எனக்குள்ளே உலாவரும்!
உன் நினைவுகளைச் சொல்ல!
இப்போது எல்லாமே!
அடங்கிப்போனதடா!
இந்த காகிதக்குவியலை!
என்னிடம் நீட்டி!
கையெழுத்து!
கேட்ட கணத்தில்....!
இனியவனே!
உனக்காக-என்!
எழுதுகோல் தேம்பலோடு!!
இனியவனே!
கண்ணீர்தான்!
இதுகூட கண்ணீர்தான்!!
நிறமென்னவோ கருமைதான்!
நினைவென்னவோ பசுமைதான்!
நம் நினைவென்னவோ பசுமைதான்!!
எந்த சலனமுமின்றி!
எழுதுவென!
ஏடு கொடுத்திட்டு!
என் புலம்பலைப் பார்த்து!
பூரிக்காமல்-ஏனடா!
புகுந்து கிடக்கிறாய்!
உன் அறைக்குள்ளேயே...!
காலங்களே தருகின்றன....!
காலங்களே பறிக்கின்றன....!
இது கண்ணதாசரின் வரி!
நானே !
அதற்கு வடிவமாகிவிட்டேனடா...!!
எழுதத்தெரியாமல்!
இந்த ஏழை எழுதுகிறாள்!
எல்லாமும் சொல்ல எண்ணுகிறாள்!
என்பதனை!
எடைபோட்டதா உன் மனம்..!!
இனியவனே....!
பந்தங்கள் எத்தனையோ!
பந்தயக்குதிரையாய்!
என் பாழ்பட்ட மனதில்!
பள்ளம் பறித்தாலும்!
நீ மட்டும்தானடா!
நிலையாய் இருந்து!
நீர் கண்டவன் என் கண்களில்.!
எல்லோரைப்போல !
நீயும் -எனை !
ஏடுகொடுத்து பிரித்திட்டாயே!!
உனது கரகரப்பில்!
எனது பெயர்!
இனி உச்சரிக்காமலே போகுமோ!
சொந்தமுள்ள உனைப்பற்றி!
சொல்லதொடங்கினேன்!
சொல்லால் எழுதத்தொடங்கினேன்!
என் சொற்கள்!
செயலிழந்து போனதடா!
என் பெண்மைக்குமுன்!
அதனால் சொல்லாமலே!
விட்டுவிட்டேன் எத்துனையோமுறை!
என் காதலை...!
இப்போது சொல்கிறேன்!
பிரிய விடைகேட்கும்!
உன்னிடம்!
என் பிரியமான் காத்திருப்பை.!
காத்திருக்கிறேன் !
உன் கடிதத்துக்காக!!
அதுவரை !
நான் சுவாசிப்பது !
காற்றை மட்டுமல்ல!
உன் நினைவுகளையும்தான்.....!
தென்றல்.இரா.சம்பத்!
ஈரோடு-2 !
என் பேனாமுனையில்!
பிறவியெடுக்கும்!
இந்த மௌனச்சொற்களில்!
என் மனதோடு மல்லுக்கட்டும்!
உன் பிரிவை.. நினைவை...!
பெரிதுபடுத்தி!
எழுதத்தெரியவில்லை எனக்கு.!
உறவு! பிரிவு!!
இரண்டும் சுமைதான்!
உறவில் !
மகிழ்வே ஒரு சுமை!!
மகிழ்ந்து பிரிந்தபின்-அதுவே!
நமக்கு மனச்சுமை
தென்றல்.இரா.சம்பத்