ஒரு நிலைக் கண்ணாடி !
சில்லுகளாக உடைக்கப்பட்டபோது!
ஒற்றைத் தலைவி பல்லாயிரத்தவளாக !
பார்க்கக் கிடைத்தாள்!
புரான மலர் உருவமுடையவள்!
வாடியும் வாசமற்றவளாகவும்!
தன் மயிர்க் கொடிகளைக்!
காற்றில் துழாவி நடக்கையில்!
கால்கள் புண்பட்டு!
சில்லுகள் சிவப்பாகின்றன

ராம் சந்தோஷ்