இரத்தத்தால் நிரம்பிக் கொள்ளும் - சித்திராங்கன்

Photo by Tengyart on Unsplash

மதுக்கிண்ணங்கள்!
-------------------------------------------------------------------!
உங்கள் உயர்ந்தரக மதுக்கிண்ணங்கள்!
இரத்தால் நிரம்பியுள்ளன.!
சிதைந்துபோன !
குழந்தைகளின் பிஞ்சுக் கைகளிலிருந்தும் !
தாய்மாரின் மார்புகளிலிருந்தும் !
பிழிந்தெடுக்கப்பட்ட இரத்தத்தால் !
உங்கள் மதுக்கிண்ணங்கள் !
நிரம்பியுள்ளன.!
ஏற்கனவே காலியான மதுக்கிண்ணங்களை !
கவிழ்ந்து விடாதீர்கள்!
உங்கள் சேவகர் !
எப்போதும் காலியான கிண்ணங்களை நிரப்புவதற்கு !
தயாராக உள்ளனர்.!
முடியுமானால் !
குழந்கைளின் விலா எலும்புகளில் இருந்தும் !
சிசுக்களின் மூளையிலிருந்தும் !
எப்படி ‘சூப்’ வைப்பதென்று !
உங்கள் தலைமைச் சமையற்காரனைக் கேளுங்கள் !
தாய்மாரின் மார்புகளிலிருந்தும் !
பிருஷ்டங்களிலிருந்தும் !
எப்படிக் கறிவைப்பது என்றும் !
உங்கள் உதவியாளனைக் கேளுங்கள்.!
இருபுறமும் பரிவாரங்கள் புடைசூழ !
பஞ்சணைக் கதிரைகளில் இருந்து !
கண்ணாடி மேசைகளில் !
நிரப்பி வைக்கப்பட்டிருக்கும் !
இரத்தம் நிரம்பிய மதுக்கிண்ணங்களையும் !
சூப்புகளையும்!
உங்கள் அயலூர் நண்பர்களோடு கொண்டாடுங்கள்.!
அவர்கள் !
இன்னமும் நன்றாகவே ‘சியஸ்’ சொல்லி !
பானம் அருந்தும் வழி சொல்வார்கள் !
காலியாகும் கிண்ணங்களை !
அவ்வப்போது இடைவிடாது நிரப்பிக் கொள்ளுங்கள் !
பிஞ்சுக் குழந்தைகளும் !
எங்கள் தாய்மாரும் !
தங்கள் தங்கள் இரத்தத்துடன் !
இன்னமும்… !
உங்களுக்காகக் காத்திருக்கிறார்கள். !
!
-சித்திராங்கன்!
19012009
சித்திராங்கன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.