காதல் தடுக்கி!
உன்னில் விழுந்தவள்!
எழுந்தபிறகு எழுதுவது.!
சுகம்சொல்லியோ,!
நலம்நாடியோ!
இல்லை இக்கடிதம்!
ஏனெனில்!
இறுதிகடிதத்தில்!
எதிர்பார்ப்பு பொய்த்தனம்!
என் வாழ்வில்!
எள்ளவும் துக்கமில்லை!
நந்தவனத்தில்!
பயணம் செய்யும் தென்றலாய்!
நளினமாய் செல்கிறது இல்லறம்.!
கணவனால் காதலிக்கப்படும்!
மனைவியின் அவஸ்தையை!
எழுதிவிளக்கிவிடமுடியாது!
நானும் காதலிக்கப்பட்டு-பட்டே!
காதல் வயப்பட்டுபோனேன்.!
எதார்த்தத்திற்கு!
சாயம் பூசும்!
போலிநிலை!
பிடிக்கவில்லை எனக்கு.!
காதல்மணம்முடித்த!
எத்தனை காதலர்கள்!
கனவன் மனைவியான-பின்பும்!
காதலிக்கிறார்கள்!
தாலியேறியவுடன்!
காதலை!
கழற்றிவைத்துவிட்டு!
விடுதலையோ!
விவாகரத்தோ-வேண்டி!
நீதிமன்றவாசலில்!
கூடும் கூட்டம்!
கூடிக்கொண்டேதானிருக்கிறது.!
!
எதை நேசமென்றுகொள்ள!
உரிமையானபின்னும்!
அருமைகுறையாமல்!
நடத்துவதையா,!
அவசரம் தீர்ந்ததும்!
அரிதாரம் மாற்றும்!
நாடகத்தையா?!
பக்கத்துவீட்டு!
பாணு சொன்னாள்!
உன் மனைவியோடு-நீ!
ஒத்துப்போவதேயில்லையாம்!
உள்மனதில்!
உன் மீது-கொஞ்சம்!
வெறுப்பே வந்தது.!
காதலில்கூட-நீ!
சரியாய் கடமையாற்றாததால் தானே!
நாம் கைமாறிப்போனோம்!
இப்போதும்!
அதே தவறை!
ஏன் இழைக்கிறாய்?!
சிறுகச்சிறுக!
சேர்த்துக்கொண்டால்!
விஷம்கூட!
உணவாகிவிடுகிறது!
உன் மனமென்ன!
விஷத்தைவிடகொடியதா?!
என்னை நினைத்தபடி!
உன்னை-நீ!
மறந்துபோவதாய்!
கேள்வியுற்றேன்.!
மனைவியை!
நேசிக்கத்தெரியாத-நீ!
மற்றவன்!
மனைவியையா நேசிக்கிறாய்?!
மனம்சொல்கிறது!
உன்னை!
மறந்ததே சரியென்று.!
காலாவதியானகாதலனே!!
இலக்கியமும்!
சினிமாவும்!
காதலை!
சுயநலமாகவே!
சொல்லிக்கொடுத்திருக்கிறது.!
ஹார்மோசோம்களின்!
கட்டளைக்கிணங்கிதான்!
காதலித்தோமோ!
என்கிற சந்தேகம்!
இப்போதெல்லாம்-எனக்கு!
வருவதுண்டு.!
தெரிகிறது-என்னை!
திட்டத்தொடங்கிவிட்டாய்!
சந்தோஷம்-!
உன்மனைவியை!
நேசிக்கத்தொடங்கியதில்.!
இப்படிக்கு!
என்றுமே உன்னை!
நினைக்கவிரும்பாதவள்!
(பொய்கூட!
சந்தோஷமாகத்தான்!
இருக்கிறது!
காதலுக்காக!
சொல்லப்படும்போது.)
சிலம்பூர் யுகா துபாய்