நட்ட நடு நிசியில் மொட்டை மாடிக்கு,!
நிலாவின் கதவைத் திறந்து வந்தான்,!
இரட்டைத்தலை இராட்சஷன்.!
கனவா நனவா...யோசிக்கும் முன்,!
நான்தான் உன் மனசாட்சியின்,!
ஒட்டு மொத்த கசடு....,!
உன் எண்ண தேசத்திலிருந்து,!
கற்பித தேர் வழியாக வந்தேன்!
என்றானே பார்க்கலாம்!!!.!
என்ன விசயமாய் வந்தாய்?.,!
என வினவலாம் என்பதற் குள்ளே,!
உன் கெட்ட எண்ணங்களை எல்லாம்....!
உன்னுள் புதைத்து விடு,!
வெளியில் பரவிடும் கசடு எல்லாம்...!
புதிய உயிர்க்கு கேடு என்றான்....!
எப்படி புதைப்பது என்றால்,!
செப்படி வித்தையா உள்ளது....!
!
மனிதர்களுடன் மட்டும் சேர் என்றான்,!
அப்போ நீ கிளம்பு,!
நான் தேட வேண்டும் என்றேன்.!
- நவீனன் பாரதி
நவீனன் பாரதி