முகமூடி அணிந்த இருள் ஒன்று !
கவ்விக்கொண்ட சொப்பனங்கள் !
சுமந்த அந்த சுதந்திரமற்ற அறையின் !
முனையில் சுவாசிக்க கூட முடியாது !
சுருண்டுகிடந்ததொரு கவிதை! !
மண்ணில் ஜனனித்த நாள் முதலாய் !
விடுமுறையின்றி ரசிக்கப்பட்ட !
அக்கவிதை மரணத்தை யாசித்து தன் !
சுவாசங்கள் சுருக்கி சுருண்டுபோய் !
கிடக்கிறது, சுதந்திரம் என்ற சொல்லையே !
சுத்தமாய் துறந்திருக்கும் அவ்விருள் சூழ்ந்த!
இருட்டறையில்! !
தற்கொலைக்கான முயற்சிகள் யாவும் !
தட்டிக்கழிக்கப்பட்ட நிலையில் தளர்ந்து !
போன நம்பிக்கைத்தாலாட்டை மீண்டும் !
ஒருமுறை தூசி தட்டி மெட்டமைத்து!
பாடியது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் !
அக்கவிதை! !
புல்லாங்குழல்களின் துளைகள் வழியே !
ஊடுருவும் காற்று உயிர் பெற்ற !
ஓரிசை போல் உருமாறுவதைப்போல !
இக்கவிதையின் கண்களில் கலந்த !
அகோரக்கோரிகள் கூட அம்சமுள்ள !
ஓர் அற்புதப்பிறவிகளாய் அறியப்பட்டிருந்தனர்! !
ஆற்றாமையின் அடித்தளப்பாதடியில் !
அணுவணுவாய் அனுங்கிக்கொண்டிருக்கும்!
ஒளியறியா கவிதையொன்றினால் உள்!
மூச்சு சுவாசத்தை வெளியெறிந்து விடுவதை !
தவிரவும் வேறென்ன செய்து விட முடியும்?
துஷாந்திக்கா