நட்பு - ராஜா கமல்

Photo by Tengyart on Unsplash

கண்டங்கள் கடந்து விட்டாலும்!
நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும்!
உறவு அந்த உறவு!
காலங்கள் கடந்து விட்டாலும்!
கடல் அலையாய்!
மீண்டும் மீண்டும்!
இதயத்தை நனைக்கும் உறவு!
அந்த உறவு!
அன்னையிடமும்!
அருமை மனைவியிடமும்!
பகிர முடியாத!
அந்தரங்கங்களை எல்லாம்!
பகிர்ந்துக் கொள்ளும்!
அற்புத உறவு அந்த உறவு!
சோகங்களையும்!
தாகங்களையும்!
பகிர்ந்துக் கொள்ளும்!
சத்தான உறவு அந்த உறவு!
உள்ளத்திலும் உதட்டிலும்!
ஒருமித்திருக்கும்!
உறவு அந்த உறவு!
இதற்கு தாய் வழியும் இல்லை!
தந்தை வழியும் இல்லை!
அது ஒரு சோகங்களை!
இறக்கி வைக்கும்!
சுமைதாங்கி!
அது ஒரு மகிழ்சியை!
பகிர்ந்து கொள்ளும்!
பள்ளிக் கூடம்!
அது ஒரு!
பட்டாம் பூச்சியாய்!
பறந்து மகிழ்ந்த!
மலர் வனம்!
அது ஒரு!
மாறத மணம் விசும்!
நந்தவனம்!
சொற்களால் வடிக்க!
அது கம்பர் கால காவியம் இல்லை!
கற்களில் வடிக்க அது!
சோழர் கால கற்சிலையும் இல்லை!
நதியோரத்து!
தென்றலின் சுகம் அது!
கோடை மழையின்!
சாரலின் சுகம் அது!
உள்ளத்தால் மட்டுமே!
உணர்ந்து கொள்ளும்!
அற்புத உணர்வு அது!
இந்த உறவுக்கு மட்டும்!
என்னவோ தெரியவில்லை!
வயசாவதே இல்லை!
இது ஒரு!
ஒளிர்ந்து மறையும்!
மத்தாப்பூ அல்ல!
இது ஒரு!
பூத்து உதிரும்!
உதிரிப் பூவும் அல்ல!
உதிரும் பூக்கள்!
உள்ள உலகில்!
உதிரா பூ!
இந்த நட்பு!
சில நேரங்களில்!
சில மனிதர்களிடம்!
ஒரு முறை மட்டுமே!
பூக்கும் அதிசய பூ!
இந்த நட்பு
ராஜா கமல்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.