இதயத்தின் மொழியில் உன்னிடம் - காளி நேசன்

Photo by engin akyurt on Unsplash

உன்னை பார்த்துக்கொன்டிருந்த நொடிகள் ஒவ்வொன்றும்!
ஒரு பிரளயம் என் காலடியில்!!
காதல் சொல்லியபின் கடந்த ஆண்டுகள்!
நொடியில் நழுவி சென்றதாக எண்ணம்!!
எனக்கு இதயத்தின் மொழியில்தான் பேச தெரியும்!!
எனக்கு புரிந்ததெல்லாம், இதயத்தின் மொழி மட்டுமே!!
என் சொல், குறியீடு, சைகை எல்லாம் என்!
ஆன்மாவின் ஆழத்தில் உதிப்பவை!!
நான் எந்த ஒரு கூட்டத்தையும் எளிதில் சாராதவன்!!
அவை சார்ந்த சொல், குறியீடு, சைகைகள் எதுவும் புரியா!!
காதலுடன் சேர்ந்து வரும் சாரல் மழை என்றனுபவத்தை தவிர!
மற்ற விஞஞானங்கள் எதிலும் நம்பிக்கையில்லை!!
நான் பார்ப்பதெல்லாம் இவைகள்தான்!
காதலின் துடிப்பு, ஆன்மாவின் அழகு, இதயத்தின் உண்மை!!
இவைகளில் எந்தவிதத்திலும் நீ தோற்றவள் அல்ல!!
சிவப்பு வண்ண உடையில் என் அருகில் நீ !
செம்பருத்தி மலரின் இதழ்களால் நெய்யபட்ட சந்தன யாழ்!!
ஆன்மாவின் ஆழத்தை உணர்த்தும் உன் அழகிய விரல்கள்!
முல்லை மலர்கள் பதித்த செண்பக பூங்குலழ்கள்!!
இந்த கரங்களுக்கு என்னால் என்ன பெரிதாக தர முடியும்?!
கொடுக்கவிருந்ததையும் கடலிடம் அளித்துவிட்டேன்!!
உனக்கு நான் எதையும் கொடுக்கவில்லை!
சில கவிதைகள் தவிர! ஆனாம் எல்லாம் இழந்து நிற்கிறேன்!!
என்னை சுற்றி சுற்றீ வந்து நீ பேசாமல் செல்வது .....நான் என்ன சொல்வது?!
இனி இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்னிடத்தில்
காளி நேசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.