மாதமது மார்கழியில் மதியின் வட்டம் !
. . வானத்தில் தோன்றிடவும் மக்கள் கூட்டம் !
பேதங்கள் இல்லாது பெரிய தூரம் !
. . பேசாமல் பிதற்றாமல் கடந்து வந்து !
நாதங்கள் இசைத்துநன்றே உயர்ந்து நிற்கும் !
. . நானவித மரங்களின் நடுவே அங்கு !
பாதங்கள் நடைபோடும் உச்சி நோக்கி !
. . படியளத்தோன் இட்டுவைத்த பாதம் பார்க்க !
தயவுசெய்யும் நோக்கத்தில் படிகள் கட்டி !
. . சங்கடத்தில் ஏறுவோர்க்கு வேலி போட்டு !
பயணிக்கும் போதினிலே உரசும் காற்றும் !
. . பயமில்லா இருட்டுமந்தச் சூழல் தன்னில் !
உயரமில்லா செயற்கையில் இட்டு வைத்த !
. . ஒளிக்கோடு மேல்நோக்கி உயர்ந்து செல்ல !
வயதுவந்தோர் வெள்ளாடை தரித்துக் கொண்டு !
. . மனம்மகிழ பக்திஇசை பாடிச் செல்வார் !
விடிகின்ற நேரத்தில் உச்சி எட்ட !
. . மெல்லிசைத்து வரவுசொல்லும் புள்ளினங்கள் !
கொடிகளிலே பூத்துவிட்ட மலர்களாலே !
. . கூடிவரும் நறுமணமும் மயக்கம் செய்யும் !
அடியதனைக் காணுகின்ற எண்ணத்தாலே !
. . ஆட்டுவிக்கும் களைப்பெல்லாம் ஓடிச் செல்லும்!
துடிதுடிக்கும் மனிதனது உள்ளம் அங்கே !
. . தூயவனின் அடையாளம் எண்ணுற்றாலே !
ஒளிபடர்ந்த உச்சியினை அடைந்த போது !
. . ஒப்பில்லா உவகைவந்து உடலில் ஒட்ட !
நௌ¤வில்லா நீண்டதொரு வரிசை நின்று !
. . நீசமில்லா இறைவனவன் இட்டு விட்ட !
தௌ¤வான பாதஅடை யாளம் கண்டு !
. . சிறப்பான அருளத்னைப் பெற்ற வேளை !
களிக்கின்ற மனதைத்தான் எடுத்துச் சொல்ல !
. . காணவில்லை சொற்களென்று நொந்து கொள்ளும் !
ஆண்டவனின் அருளதனைக் கண்ணுற் றுப்பின் !
. . அங்குதிக்கும் கதிரவனின் உதயம் காண !
வேண்டாத குளிரதையும் தாங்கிக் கொண்டு !
. . விடியலுக்குத் கூடுகளும் காத்து நிற்கும் !
தீண்டுகின்ற ஒளிக்கீற்று கிழக்கில் எட்ட !
. . தீயாத எழிலங்கு தோன்றி நிற்க !
*கூண்டிற்கு முழுவட்டம் ஒளியைக் காட்ட !
. . கூச்சத்தில் கண்களெல்லாம் மூடிக் கொள்ளும் !
பகலவனின் பாச்சுமது வெளிச்ச வெள்ளம் !
. . பரிணாமக் காட்டலிலே கடலும் ஆறும் !
அகலமான பொருப்புகளில் எழில் *தே தோட்டம் !
. . அதையடுத்துப் பாய்கின்ற நீண்ட ஆறு !
நிகழ்கால சரித்திரத்தில் எழில் கொஞ்சும் !
. . நீங்காத நினைவுகளாய் ஊன்றி நிற்கும் !
நுகவோர்கள் நொடியினிலே கூடிச் செல்லும் !
. . நொடியாத அருளுடனே அழகுச் செல்வம் !
இறைநோக்கும் இயற்கையும் வதனம் செய்ய !
. . ஏறுவோர் யாவரையும் ஈர்த்து நிற்க !
நிறைவான எழிலங்கு வண்ணம் காட்டும் !
. . நேரத்தில் உணர்வுகளும் ஒத்துப் பாடும் !
குறைவில்லாப் பயணமங்கு இறங்கி னாலும் !
. . கூடிவிட்ட எழிற்கொள்ளை இன்னும் கூட்டும் !
மறைந்திருந்த மலைக்காட்சி கண்ணில் பட்டு !
. . மயக்கத்தில் தம்மையே இழக்கச் செய்யும் !
குறிப்புகள் !
------------------------ !
சிவனொளிபாத மலை - எல்லா மதத்தினரும் தங்கள் இறைவன் பாதம் பட்ட இடமாகப் போற்றும் சிறப்புப் பெற்ற மலை இங்கு குறித்த தினங்களில் நள்ளிரவில் மலையேறி உச்சியில் அமைந்த ஆண்டவன் பாதமும் கதிரவன் உதயமும் காண்போர் எண்ணில் அடங்கா ( ஏறுவோரில் உள்நட்டார் , வெளிநாட்டார் என எல்லா மதத்தினரும் அடங்கும் )!
கூண்டு - பூமிக் கூண்டு !
பொருப்பு - மலை !
தே - தேயிலைத் தோட்டம் !
!
அன்புடன் !
அவதானி கஜன்
அவதானி கஜன்