காதல் தோல்வி - II - சரவண வடிவேல்.வே

Photo by Pramod Tiwari on Unsplash

வழக்கம்போல்!
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்!
இந்த முறை!
சற்று ஜாக்கிரதையாகவே செயல்பட்டேன்.!
முதலில் அந்த காகிதங்களை கிழித்து!
பின், அவற்றை தீயில் எரித்துவிட்டேன்.!
நினைவு பொருள் என்று என்னிடம்!
இருந்த ஒரேஒரு பேனாவையும் உடைத்து!
கடல் நீரில் தூக்கி எறிந்துவிட்டேன்.!
இ-மெயில் உரையாடல்களை மொத்தமாக!
இன்பாக்ஸில் இருந்து நீக்கிவிட்டேன்.!
நினைவுகளை அழிக்க கையில்!
எப்பொழுதும் ஒரு ஸ்காட்சை!
வைத்து உள்ளேன்.!
இனி ஒரு தடயமும் இல்லை.!
யாராலும் சந்தேகிக்க முடியாது!
யாராலும் கண்டுபிடிக்க முடியாது!
யாராலும் நீருபிக்க முடியாது!
நீருபித்தாலும்!
எங்கள் பிரிவை உங்களால்!
தடுக்க முடியாது!
இந்த முறை சற்று உரக்கமாகவே!
சொல்கிறேன்!
எல்லா ஆதாரங்களையும் அழித்துவிட்டேன்
சரவண வடிவேல்.வே

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in
  • Manikandan Manickam Avatar Manikandan Manickam - 7 மாதங்கள் முன்

    nice