எண்ணம் என்னும் கோட்டைக்குள்!
ஆகாசப் பூக்களை!
தோரணம் கட்டியது யார்!
விதையில்லா விருட்சத்தின்!
ஆசை நூலில்லாடும் ஆயுள் கைதி நான்!
ஓசை இன்றி எப்படிச் சொல்வேன்!
ஆசைத் துறவியல்ல நான்!
நரையும் திரையும் சூழ்ந்த பெரிசுகளே!
ஆளக் கடலிலும் முத்தெடுக்கும்போதில்!
இளமை ஊஞ்சலை எப்படி நிறுத்துவேன்!
பதினாறுதானே என் வயசு!
பகலில் கொள்ளையிடும் நட்ச்சத்திரங்களை!
இரவில் குவிக்கும் இறைவனும்!
ஆசை பித்தனே!
இமையை இமை தொடாது விடுமா!
விழியை உறக்கம் தழுவாது தணியுமா!
தணிந்தது தாகம் என்று!
பாகம் பிரிக்கவில்லை!
ஒழுக்கம் வழுவாது இழுக்கத்தில்!
வீழ்ந்த நெஞ்சை!
பாடை வளர்த்தி தோழ் தூக்க!
நால்வர் அருகில்!
ஆயுள் முடிவின் நொடிப்பொழுது!
எண்ணப்படுகிறது எனக்கு!
இப்போதும் ஆசைத் துறவியல்ல நான்!
முள் படுக்கை விரிப்பில் கிடந்தும்!
மரணதேவனை!
வா வா என்றே அழைக்கிறேன்!
ஆசையுடன்.!
வல்வை சுஜேன்