உன்னின் ஒவ்வொரு!
நொடியிலும் - உடனிருந்து!
உனது வெற்றிகளுக்கெல்லாம்!
ஊன்றுகோளாக இருந்து!
உன்னை உற்சாகப்படுத்திடவேண்டும்!
என்னவளின் திருக்கரங்களால்!
எண்ணற்ற வெற்றி மாலைகள்!
என் தோள்களை!
அலங்கரிக்க வேண்டும்!
இயற்கையின் அழகினை!
இயன்றவரை உன்னுடன்!
இருந்து இன்புற்று!
ரசித்திட வேண்டும்!
இப்படி எண்ணற்ற!
ஆசைகளை என்னுள்!
சுமந்து திரிகின்றேன்!
என்னவளே!
என்று நிஜமாகும்!
நமது கனவுகள்....!

வீ.இளவழுதி