கடந்த பாதையின் கஷ்டங்கள்!
கடந்த பின் தெரிவதில்லை!
வருகின்ற பாதையின் வழிகளின்!
வரைபடம் கிடைக்கவில்லை!
கால்போன போக்கில் போக!
கற்ற கல்வி அனுமதிக்கவில்லை!
விதிவழி செல்வதற்கு!
ஈவேரா போதிக்கவில்லை!
விட்டு விட்டு செல்வதற்கு!
பாசம் விடுவதில்லை!
விடுதலை உணர்வுக்கு தடையிட!
முள்வேலிக்கு முறுக்கில்லை!
உலகே ஓரணியில் திரண்டாலும்!
போராட்டங்கள் ஒடுங்குவதில்லை!
கைவிடுவதற்கு முல்லைதீவு ஒன்றும்!
முல்லை பெரியாறில்லை
வி. பிச்சுமணி