ஏவலர்கள் எஜமானர்களாய்.. அடிமை நாச்சியார்!
01.!
ஏவலர்கள் எஜமானர்களாய்!
---------------------------------------------------!
நாம் வடிதத கடவுள் சிலைதான்!
இருந்தபோதிலும்!
எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது!
நாம் விதைத்து அறுத்த நெல்தான்!
இருந்தபோதிலும்!
நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை!
நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள்!
இருந்த போதிலும் !
பணிந்து முன் நிற்க வேண்டியுள்ளது.!
நாம் வாக்களித்து வாகைசூடிய தலைவர்கள்!
இருந்தபோதிலும்!
நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்!
நாம் இயற்கையில் மனிதாக பிறந்துவிட்டோம்!
இருந்த போதிலும்!
நமக்கு முதுகெலும்பு இருப்பதை மறந்துவிட்டோம்!
02.!
அடிமை நாச்சியார்!
-------------------------------!
அம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு!
செல்லும் போது எல்லாம் உடனே!
எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன்!
வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள்!
கட்டப்பட்ட கழுதைகளை!
தாண்டி செல்ல தயங்கும் போது!
அய்யம்மாவின் குரல்!
வாங்க நாய்னா நாச்சியார் வந்திருக்காங்களா எனும்!
அம்மா வந்திருக்கா என பதில் அளிக்கும் என் குரல்!
வேலு கழுதையை பொதியுடன் ஆற்றுக்கு பத்தி செல்ல!
அவனுடனும் கால்கட்டு எடுத்து கழுதையுடனும்!
நடந்து செல்கையில் வழியில் உள்ள வயலில்!
சோளகதிர் உடைத்து கஞ்சிக்கு அவன் கொண்டு வந்த!
உப்பை போட்டு சோளம் அவித்து!
சாப்பிட்ட காலம் நெஞ்சில்!
இப்பொழுது செல்லும் போது வேலு இல்லை!
அய்யம்மா நய்னா எப்பவந்தீங்க என தளர்நத குரலில் கேட்க!
நய்னா நாச்சியார் அர்த்தம் புரிந்து தெளிந்து!
அடிமைப்படுத்தும் அந்த வார்த்தைகளை!
நான் முழுங்கி நாளாகிவிட்டதால்!
நீங்க நல்லாயிருக்கீங்களா!
வேலு என்ன செய்கிறார் என கேட்க!
வித்தியாசம் ஏதும் தெரியாது காட்டாது!
நய்னாவுக்கு எத்தனை பிள்ளைங்க!
என குசலம் விசாரித்தார் அந்த அம்மா

வி. பிச்சுமணி