அடர்ந்நத வெண்பனியில்!
எழு ஞாயிறு முழு நிலவாய்!
காட்சி பிழைசெய்த நாளில்!
திங்களில் ஞாயிறை!
காண தேநீர் கடையில்!
துவாரக பாலகனாய்!
காத்திருந்தேன்!
கடல்அலைகள் ஞாயிறை!
கரைந்திடுமா என்ன!
உன்னை காணவில்லை!
மேகம் மறைத்த!
இரவாய் வாடிபோனேன்!
சாரல் விழுந்த!
புள்ளி கோலமானேன் !
கல்லெறிந்த!
நீர் பிம்பமானேன்!
மழலையர் பள்ளி !
முதல்நாள் மழலையானேன்!
கூட்டத்தை விட்ட!
குருட்டு கொக்கானேன்!
புதிய மகிழ்ஊர்தியின்!
முதல் கீறலானேன் !
காடையர் குண்டு விழுந்த!
ஈழ பதுங்குகுழியானேன்!
என்ன செய்வதறியாது !
தீக்குளிக்கும் தமிழனானேன்!
இனி என்னவாவேன் என தெரியாது!
என்ன என்னமோ ஆனேன்!
வண்டிகாரன் தூங்கினாலும்!
பழகிய வண்டி மாடுகள்!
வீடு சேர்வது போல்!
நடைபிணமாய் நடந்து..!
-வி. பிச்சுமணி
வி. பிச்சுமணி