வீடுபோகும் கனவுகள் - புஸ்பா கிறிஸ்ரி

Photo by FLY:D on Unsplash

அவசரமான காலையின் நேரம் !
அதிகமான வாகன ஓட்டம் !
சதிகாரப் பனியின் கொட்டம் !
சகதியாய் மாறிடும் ரோட்டும் !
கனதியாய் உடைகள் வாட்டும் !
கடுகதியாய் வந்திடும் பஸ்ஸீம் !
நெரிசலாய் நகர்ந்திடும் நீள்வாகனம் !
வரிசையின் நேரத்தைக் கூட்டிடும் !
வண்டியைப் பிடித்திட ஓடிடும் !
சண்டைக் கோழியாய் கூட்டமும் !
முண்டியிட்டு மோதியே ஏறிடும் !
மண்டையைப் பிய்த்திட நேரிடும் !
கூட்டத்தில் இருக்கையைத் தேடிடும் !
கூட்டத்தோடு நானுமங்கு நின்றிடும் !
நேரத்தில் இடமும் வந்திடும் !
நீண்டதொரு பெருமூச்சு வெளியேறும் !
கடைசியில் வேலையைத் தொடங்கிடும் !
போதினில் கண்களை நிறைத்திடும் !
போதாத மாலைநேரம் வந்திடும் !
மறக்க முடியாத சனக்கூட்டம் !
நெரிசலுடன் ஏறிடத் துடித்திடும் !
கரிசனைக் கனவுகளாய் கண்டிடும் !
விருப்பமுடன் வீடுபோகும் கனவுகள் !
!
புஷ்பா கிறிஸ்ரி
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.