அந்த பயணத்தின் போது!
நினைவு பறவைகள் பறந்து!
நிகழ்வு மரங்களில் மாறிமாறி அமர்ந்து!
என்னிருப்பை இழக்கசெய்தது!
முட்டு சந்தொன்றில்!
முட்டி நிற்பதன்ன!
“மாப்ள எப்படி இருக்க”!
ஆரம்பபள்ளி நண்பனின் அழைப்பு!
ஒருவருகொருவர் விசாரிப்புகள்!
அன்நாளைய இலங்கை வானொலி!
இரவின் மடியிலான!
இன்பத்தில் திளைத்திருக்கையில்!
அவரவர் வேலை விசாரிப்பில்!
பொய் மரியாதைகளை!
பார்தது பழகி அனுபவித்து வெறுத்து!
உண்மை நட்பிலான வார்த்தைகளில்!
பொய் மரியாதை பூ!
பூத்து விடக்கூடாதென நான்!
பொய் சொல்லிவிட்டேன்!
வி. பிச்சுமணி