கடல் மடியில் தவழ்ந்து!
கடல் மடியில் உணர்ந்து!
கடல் மடியில் கூடி!
கடல் மடியில் காதல் பொழிந்து??!
எங்கே என் அம்புலி?!
கடல் காற்றில் மூச்செறிந்தாய்!
கடல் வெளியில் உரத்துச் சிரித்தாய்!
கடல் மடியில் எழுதி வடித்தாய்?.!
எங்கே என் அம்புலி?!
அச்சம் முகத்தைக் காய்த்து!
இதயத்தில் செட்டை முளைத்து!
பொழுது பொழுதாய் அடித்து!
தெருவும் திசையும் வேறுவேறாய்?.!
எங்கே என் அம்புலி?!
எங்கே ஒளிந்தாய்!
எங்கே மனசை விதைத்தாய்!
எங்கே தூக்கத்தை அணைத்தாய்!
எங்கே கனவைக் கரைத்தாய்.!
இனி என்ன!
நான் எங்கு செல்வேன்?!
காற்றின் முதுகில் பயணம் செய்து.!
வா.!
அன்பே!!
இனியேனும் வனம் ஒன்றில் வகை செய்வோம்!
ஒரு பெருமரத்தில் தவழ்ந்து பூரிப்போம்!
என் நாள் வரும்!
உன் மூக்கை நுள்ள!
கடலை அணிசெய்ய!
என்றும் உன் உருவம் மறவேன்!
உன் தூக்கணம் மின்னிய கடற் புனலில்.!

டீன்கபூர்