01.!
காகிதம்!
------------!
பேராசைக்கேடயம் தாங்கி!
எதிர்த்துவரும் தர்மங்களை!
தகர்த்தெறிகிறது ஒரு!
கையெழுத்திட்ட காகிதம்...!
பரிமாறிக்கொள்ளப்பட்ட!
தேவைகள் நின்றுவிட!
கேடயங்களுக்குள்!
ஒளிந்து கொண்டன காகிதங்கள்...!
இது ஒரு!
போர்...!
என்னவென்று தெரியுமுன்!
தொடங்கிவிடும் போர்....!
இங்கு வெட்டிச்சாய்ப்பது!
பிரதானமல்ல...!
போர் தொடர்வதே!
பிரதானம்...!
அதைத்தான் விரும்புகின்றன!
காகிதங்களும்...!
!
02.!
மெர்க்குரிக் கனவுகள்!
--------------------------!
திரைச்சீலை இடுக்குவழி...!
நுழைந்துவிட்ட!
மெர்க்குரி விளக்கொளி...!
அனுமதியின்றி உறங்கியிருந்தது!
தடுமாறி விழுந்த!
என் படுக்கையில்...!
கொட்டும் பனியை!
நினைவூட்டியபடி!
இறங்கிக்கொண்டிருந்தன!
அதன் கனவுகள்!
துகள்களாய்...!
!
03.!
இளமை!
------------!
மெளனத்தை முன்னிறுத்தி!
பின்னால் ஒளிந்து கொள்ளும்!
ஐயங்கள்...!
அரைகுறையாய்!
முழுமையடைகிறது!
வயதுக்குரிய சில!
விளக்கங்கள்...!
நொடிப்பொழுதுகளில்!
கவனிக்கப்படாமல்!
கடந்து போய்விடுகிறது!
படிப்பினைகள் ...!
இன்றும் நாளையும்!
பகிர்ந்து கொள்ளும்!
நம்பிக்கைகள்...!
கேட்கப்படாத கேள்விகளில்!
மிக அரிதாகிவிடுகின்றது!
இளமை
ராம்ப்ரசாத், சென்னை