ரா.சொர்ண குமார்.!
மாசு இல்லா இதயத்திலே!
தூசு போல உன் நினைவு!!
தட்ட தட்ட மேலும்!
ஒட்டிக் கொண்டே இருக்கிறது!!
பிரித்து விடலாம் என முயன்றால்!
மனம் எச்சரிக்கின்றது!
மரித்துவிடுவாய் என்று...!
மரிப்பதற்கும் மனமின்றி,!
நினைவை எரிப்பதற்கும் வழியின்றி,!
மனது வலித்துக்கொண்டே இருக்கிறது!!
எப்போதோ நேசிப்பதாய்!
நீ சொன்ன வார்த்தைகளில்தான்!
இதயம் இன்னும்...!
துடித்துக்கொண்டே இருக்கிறது
ரா. சொர்ண குமார்