ரா.சொர்ண குமார்.!
பூமிக்கே கொள்ளி வைக்கும்!
போர்கள் மடியவில்லை!
இவ்வாண்டும்!!
மதம் பிடித்த மதங்கள் செய்யும்!
கலவரங்கள் ஓயவில்லை இவ்வாண்டும்!!
பெண் பூவை கசக்கி எறியும்!
கொடூரம் குறையவில்லை!
இவ்வாண்டும்!!
எளியோனை வலியோன் வாட்டும்!
இழி நிலை ஒழியவில்லை!
இவ்வாண்டும்!!
இன்றைய ஆண்டுதானடா!
நேற்றைய புத்தாண்டு!!
வருடங்கள் மாறுகின்றன...!
வாழ்க்கை ?!
முடிந்த ஆண்டின் இழிவுகள்!
தொடரும் ஆண்டிலும் தொடருகின்றன.!
பன்னிரு மாதத்திற்கொரு!
ஆண்டு வரும் !!
நான் தேடும் புத்தாண்டு!
என்று வரும் ?!
இரத்தத்தின் நிறத்தையே!
மனிதன் மறக்கும் ஆண்டு..!!
மதம் பிடித்த மதங்கள் அழிந்து!
மனம் பிடித்த மனிதம் மலரும் ஆண்டு..!!
கடலின் அடியில் ஆயுதஙள்!
கண்ணயர்ந்து தூங்கும் ஆண்டு...!!
நான் தேடும் புத்தாண்டு!
என்று வரும்?!
வருடங்கள் மாறி பயனென்ன ?!
வாழ்க்கை மாறாமல்...?!
மாதங்களின் மாற்றத்தில் இல்லை!
நான் தேடும் புத்தாண்டு...!
மனித மனங்களின் மாற்றத்தில்
ரா. சொர்ண குமார்