நினைவு.!
---------!
சகியே.....!
புதைத்துவிடச் சொன்னாய்!
நானும் செய்தேன்!
ஆழமாய்தான் புதைத்தேன்-ஆனால்!
விதைத்து விட்டதாய் எண்ணி!
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது!
என் இதயப்பரப்பு பூராவும்!
உன் நினைவு.!
!
காதல்!
----------!
சகியே...!
பக்கத்தில் நீயில்லை!
பந்தயக்குதிரையாய்!
விடாமல் துரத்தும்!
உன் நினைவுகள்!
என் ஒவ்வொரு நாழியையும்!
வார்த்தைகளுக்குள்!
வளைக்கமுடியாத வலியோடு!
நகர்த்துகிறதடி....!
எப்படியோ!
நடந்ததைச் சொன்னேன் உன்னிடம்!
சரியாகிவிடுமென்கிறாய் சாதாரணமாக!
நானும் திரும்பக்கேட்டேன்!
நீ மௌனிக்கிறாய்....!
எனைப்போலத்தானே !
உனக்குமிருக்கும் அவஷ்தைகள்!
இருக்கவேண்டுமென்கிறது!
என் மனமென்றேன்!
ஒருவருக்கு வலித்தால்!
காதலில்லையென்கிறாய்!
நான் மௌனிக்கிறேன்!
என் அறியாமையையும்!
உன் காதலையும் நினைத்து.!
!
தென்றல் இரா.சம்பத்!
ஈரோடு-2
தென்றல்.இரா.சம்பத்