ரா. சொர்ண குமார்.!
இன்னும் இன்னும் இன்னும்!
இதயம் வலிக்கிறது...!
உன் பொய்யான வார்த்தைகள்!
புண்ணாக்கிப் போனதால்,!
இன்னும் இன்னும் இன்னும்!
இதயம் வலிக்கிறது!!
உள்ளத்தை உறங்கவிட்டு!
உதடுகளை உயிர்பிப்பாய் !!
நீ சொன்ன வார்த்தைகளில்!
நீந்த முயன்று மூச்சிரைப்பேன்!!
தெளிவாக குழப்புகிறாய்.!
தெளியாமல் குழம்புகிறேன்.!
உனக்கான என் காதலினை!
நான் சொன்ன நாளன்று...!
எனக்கான உன் காதலை,!
உறவுகளின் மேடையிலே...!
சுற்றத்தின் தூக்கினிலே...!
கவலையின்றி கொன்றுவிட்டாய்!!
இன்று...!
ஒத்துக்கொள்ளா உன் காதலோடு!
ஒத்துப்போய்விட்டாய் நீ !!
உன்னால் செத்துப்போன காதலை!
கட்டி அழுகின்றேன் நான்
ரா. சொர்ண குமார்