இன்று வந்தது!
நாளையும் வரும்!
ஆனால் நேற்று வராது!
மூடிக்கொண்ட கதவு அது!
திறந்து பார்க்க சாவியும்!
இல்லை!
சேர்த்து வைக்க வழியும்!
இல்லை!
துரத்திப் பிடிக்க ஒடுவோம்!
எங்கே தான் போய் விடும்!
நாம் இவ்வுலகை விட்டுப் போகும் முன்னர்!
இந்த நேரத்தைத் துரத்திப் பிடிக்கலாம்!
நேரத்தின் பின்னால்!
ஓடிப்போவோம் வாருங்கள்!
வேகமாய் ஓடுவோம், விரைவாய் ஓடுவோம்!
நேரம் போகிறது, ஓடுவோம் வாருங்கள்
புஸ்பா கிறிஸ்ரி