மனமே மனித மனமே !
இன்னமும் எதற்கு !
இந்தச் சோகம்? !
யார் உன்னை !
அடித்தார்கள்? !
உன்னை இந்தச் !
சாக்கடையில் !
தள்ளியவர்கள்.. !
இன்று சுதந்திரமாகச் !
சுற்றித் திரிகின்றார்கள். !
அன்று உன்னை !
அணைக்க மறந்தவர்கள் !
உன் நண்பர்களா? !
ஏன் உன் வாழ்வு !
மரணித்திருக்கிறது? !
உன் வாழ்க்கைப் புத்தகம் !
மூடப்பட்டிருந்ததா? !
அது என்றாவது !
திறக்கப் பட்டு !
படிக்கப் பட்டு !
அதனால் !
திருந்தப் போகும் !
நிலை..உன் மறு !
நண்பர்களுக்காவது !
வரட்டும்.. !
அன்று நீ !
திருந்தியிருந்தால் !
இன்றைய சிறைக்கூடம் !
வேறு யாருக்கோ !
உபயோகப் பட்டிருக்கும். !
உன் வீட்டின் அறை !
உனக்காகத் தான் !
காலியாக இருக்கிறது. !
நீ வரும் நாளில் !
உன் மனமாற்றத்திற்காக !
ஏங்கிக் கிடக்கும் !
உன் தாயின் !
கருணை உள்ளம் !
இன்றும் உனக்காக !
அழுகிறது. !
நீயும் அழுது விடு !
இனியேனும் திருந்தி விடு. !
வாழ்க்கை உன்னை !
மன்னிக்கக் காத்திருக்கிறது !
நீ தயாரா? !
தயவு செய்து தயாராகி !
வெளியே வா. !
இனியும் தவற வேண்டாம்.. !
தாயை நேசித்து வா.. !
!
-புஷ்பா கிறிஸ்ரி

புஸ்பா கிறிஸ்ரி