அன்பானவனே - புஸ்பா கிறிஸ்ரி

Photo by Didssph on Unsplash

ரோஜாத் தோட்டத்து !
ராஜ மகனே! !
நீயோ தொழுவத்தில் !
தோன்றிய !
தெய்வ குமாரன். !
பிதாவின் மகன் !
மலைப்பிரசங்கத்தில் !
மக்களை நீ தேடவில்லை !
உன் மனத்தைத் தேற்றினாய் !
உன் பிதாவின் திட்டத்தில் !
திட்டவட்டமாய் பணிசெய்தாய் !
இரத்தம், அத்தராய் மணக்க !
வியர்வை பன்னீராய் மணக்க !
முண்முடி சூட்டி உன்னை !
தண்டித்தனர் யூதர்கள்.. !
சிலுவை கூட சிந்தித்தது !
உன்னைத் தன் சிரசிலேற்ற.. !
அஸ்தமனத்துச் சூரியன் முன் !
நிஸ்டூர நாடகம் !
அரங்கேற்றம் கண்டதும் ஏனோ? !
-புஷ்பா கிறிஸ்ரி
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.