முளைத்து விட்ட அல்லது!
முளைக்க வைத்து விட்ட!
பெருமை கொண்டு சீறும்!
மிருகத்தைக் கொண்ட வனத்தின்!
ராஜ்ஜிய அடக்குமுறையில்!
அவிழ்த்து எறியப்படுகின்ற!
மான்களின் மேலான வேட்டை அம்புகளின்!
கூர் முனையின் கீழாக!
சொட்டும் குருதியின் நிகழ்காலத்தில்!
தடை செய்யப்பட்ட மாமிஷத்தின்!
சதைப்பிண்டங்களை அள்ளி அள்ளி!
பசீ தீர்க்கும் பெருத்த மிருகத்தின் பாய்ச்சல்!
புனிதம் மனக்கும் கறித்துண்டுகளை!
சுவைக்கும் அதனுடைய எண்ணம்!
கலிஷரத் தனமானதுதான்.!
ஜே.பிரோஸ்கான்