கடைசி பேருந்து... நாங்கள் பூக்களாக!
---------------------------------------------------!
1. கடைசி பேருந்து!
கடைசி பேருந்திற்காக!
நின்றிருந்த போது!
இரவு அடர்ந்து!
வளர்ந்திருந்தது!!
மனித இடைவெளி!
விழுந்து!
நகரம் இறந்திருந்தது!!
சாலையின் பிரதான!
குப்பை தொட்டி!
கிளர்ச்சியாளர்கள்!
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!!
பேருந்தின் காத்திருப்பு!
இருக்கையிலிருந்து!
விழித்தெழுகிறான் ஒருவன்!!
நகர மனிதர்களின்!
சலனம்!
காணமல் போயிருந்தது!!
விரைவு உணவுகளின்!
மிச்சம் மீதியில்!
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!!
ஊடுருவி ஊடுருவி!
யார் யாரோ திடீரென!
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!!
கறுப்பு மனிதர்களின்!
நடமாட்டம்!!
பேருந்து நிற்குமிடம் மட்டும்!
குறைந்த வெளிச்சத்தில். . .!
ஒரு சிறுமி!
சாலையைக் கடந்து!
வெருங்கால்களில் இருண்டுவிட்ட!
கடைவரிசைகளை நோக்கி!
ஓடும்போதுதான்!
கடைசி பேருந்து!
வந்து சேர்ந்திருந்தது!!
இரு நகர பயணிகள் மட்டும்!
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்!
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க!
அபார வெளிச்சம்!!
கடைசி பேருந்து!
கொஞ்சம் தாமதமாகவே!
வந்திருக்கலாம்!!
2.நாங்கள் பூக்களாக இருக்கிறோம்!
கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்!
வாழ்ந்தே பழகிவிட்டோம்!!
எங்கள் வீதிகளின்!
மரங்களெல்லாம் பேசுகின்றன!!
நாங்கள் நடந்து வருகையில்!
கிளைகளால் உரசி!
எங்களை தேற்றுகின்றன!!
எங்கள் பறவைகள்!
உறக்கத்திலும் சிறகுகளை!
முடக்குவதில்லை!!
சேற்றுக் குளங்கள்!
எங்களின் தாய் பூமியாக!
இருந்து வருகின்றன!!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!!
எங்கள் சாக்கடையிலும்!
தங்க மீன்கள்தான்!!
சிரிக்கின்றன பேசுகின்றன!!
நாங்கள் கடவுள்களை!
வணங்குவதில்லை. . .!
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்!
படையலுக்குச் சென்றதில்லை!!
எங்கள் மரங்கள்!
எங்களை உதிர்த்ததில்லை!!
என்ன ஆச்சர்யம்?!
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!!
- கே.பாலமுருகன்!
மலேசியா
கே.பாலமுருகன்