மனம் வியாகுலமாய் !
அழுது கொண்டது !
காலாரக் கொஞ்சம் நடந்து போக !
அந்தப் பெரிய வீடு வந்தது !
நாயும் தெரியவில்லை !
வாசலில் பலகை இல்லை !
நாய்கள் ஜாக்கிரதை என்று !
காவல் காரனும் இல்லை !
மஞ்சள், சிவப்பு என்று !
பலவர்ண கலவையில் !
குரோட்டன் செடிகள் !
வீட்டைச் சுற்றி !
அழகு காட்டினாலும் !
சுவர்கள் மட்டும் !
அழுக்காகிக் கிடந்தன !
உள் வீட்டு மனிதர் !
மனத்தைப் போல் !
இரவு மட்டுமே பல்துலக்கி !
காலை தேனீர் குடித்து !
வாரம் ஓருமுறை குளித்து !
மறு நாட்களில் !
வாசனைத் தைலம் பூசி !
அழகாய் உடுத்திக் கொண்டு !
குளிருக்குப் பயந்து !
குளிக்க மறந்த !
வெள்ளைக் காரனாய் !
உயர்ந்து நின்றது !
அந்த வீடு !
புஷ்பா கிறிஸ்ரி

புஸ்பா கிறிஸ்ரி