வ.ந.கிரிதரன்!
மழையே! மழையே! வா! வா! வா!!
மழையே! மழையே! வா! வா! வா!!
மாமழையே! மழையே! வா! வா! வா!!
மாமழையே! மழையே1 வா! வா! வா!!
இரவிரவாய் பெய்யுமேயிந்த அடை மழை.!
அடம் பிடித்துஅடாது பெய்யும் பேய்!
மழையாய்! பெருமழையாய்.!
விண்ணிடித்துப் படம்பிடித்த!
பேரரவாய் காரிருளில்!
மின்னல். புந்தி!
நடுங்கிக் கிடந்தும், புரண்டும்!
கண்ணயர விடாது!
கொட்டும் வானம் இரவின்!
மோனம் சிதைத்தபடி.!
என்ன மழையிது ? என்ன மழை ?!
இயற்கைப் பெண்ணே! உன்!
இதயம் குமுறியதேனோ ?!
மழையென்றால் நினைவில்!
மழைக்காளான், வயற்புறத்!
தவளை, வாற்பேத்தை, விரால்!
சிறகொடுங்கிய கிளிப்புள்,!
இருண்டதோர் மோனத்தில்!
மருண்டிருக்கும் மழைவான்,.!
வந்து வந்து போகும்.!
வந்து வந்து போகும்.!
மின்னல், இடி, கோடிழுக்கும்!
மழைத் தாரை, பெருவெள்ளம்!
இவையெல்லாம் கதைபல!
கதைபல கூறும்.கூறும். கூறும்.!
காகிதக் கப்பல், 'மழை வா ',!
'வெயில் போ!
'படம் விரிக்கும் நினைவுத்!
திரை.!
விரிந்திருக்கும் பெருவான் பார்க்க!
விரிவெளியில் கிடப்பதென்!
பெருவிருப்பு. அது போல்!
படுத்திருந்து பெய்பேய்மழை!
பார்த்துருளல்!
இன்னுமோர் இலயிப்பு.!
ஆண்டு போயென்ன ?!
அடைமழையில் இன்னும்!
அடங்கிவிடும் ஆழ்மனது.!
நடுப்பகல் மழை நள்யாம!
மழை கண்டும் ஆடாத!
மனமும் உண்டோ!!
கவிவடிப்போர் கற்பனைக்குப்!
புவியில் பஞ்சம் வைக்குமோ!
பெய்யுமிந்தப் பெருமழை.!
அன்னைபூமி அவலம் கண்டு!
அகல்வான் உதிர்க்கும் கண்ணீர்.!
அகதி அலைச்சல் கண்டு மேகம்!
வடிக்கும் கண்ணீர்.!
மழையில் புனலாடுதல்!
பேரின்பம் ஒரு போதில்.!
மாசற்றபுறம் நீங்கி!
மாசுற்று வரும் நீரில்!
நிலப்பெண்ணும்!
நிலைதளர்வாள்.!
பூவுலகின் தோழர்களோ!
நீரில், நிலத்தில்,வெளியில்!
நீரரித்து நீலம் பாரிப்பர்.!
இயந்திரப் பேயரக்கர்!
புகை கக்கும் நகரத்துப்!
பெரும்பரப்போ கனலடங்கிக்கண்சாய!
பெய்யும் மழையோ!
பெய்யும்! பெய்யும்! பெய்யும்!!
பெருமழையாய்ப் பெய்யும்.!
பேய்மழையாய்ப் பெய்யும்.!
மழையே! மழையே! போ! போ! போ!!
மழையே! மழையே! போ! போ! போ!!
மாமழையே! மழையே! போ! போ! போ!!
மாமழையே! ம்ழையே! போ! போ! போ!!
திண்ணை, Saturday May 25, 2002

வ.ந.கிரிதரன்