கால் கிலோ தோட்டினை!
காலம் காலமாய் அணிந்து!
காது தொங்கிப்போன நம் கிழவிகள்!
வெற்றிலைப் பாக்குகளோடு!
வாழ்வின் நினைவுகளையும்!
அசை போட்டபடி நம் கிழவிகள்!
அனுபவம் தந்த அன்பளிப்பாய்!
முகம் முழுவதும்!
சுருக்க சுவடுகளோடு நம் கிழவிகள்!
கற்பனை கதைகளாலும்!
நாட்டுப்புற நையாண்டிகளாலும்!
பேரப் பிள்ளைகளைக் கவர்ந்த நம் கிழவிகள்...!
வருங்காலம்!
இவர்களையும் அச்சில் ஏற்றும்!
ஏட்டில் எழுத்துக்களாக்கும்!
பண்டைய நாகரீகமெனும் தலைப்புத்தந்து!
படித்துப் பார்க்கச் சொல்லும் !
-வீ.கார்த்திகேயன்
வீ.கார்த்திகேயன்