அந்நிய மொழியின் ஆக்கிரமிப்புகளையும்!
ஆங்கில மொழி நிகழ்த்திய!
ஆழிப்பேரலைத் தாக்குதலால் உண்டான!
நிலைகுலைந்த தன்மையையும்!
அஞ்சாமல் எதிர்கொண்டு!
மலைபோன்ற நெஞ்சுறுதியுடனும்!
எல்லையிலாப் பொறுமையுடனும்!
பேரிடி, பெருமழை வெள்ளம் தாங்கி!
வைராக்கியம் கொண்டவளாய்!
நிமிர்ந்து நின்றாள் எங்கள் தமிழன்னை !
‘பேரிலக்கியச் சபைகளி்ல்!
தலை கவிழ்ந்து நிற்கும் நிலையை!
தமிழ்ச்சான்றோர் தருவதில்லை!
எக்காலத்திலும் தமக்கு!
வரகவிகள் தமிழ்வயலில்!
விளையாமல் போக!
தமிழ்மொழியொன்றும் தரிசு!
நிலமல்ல இது உறுதி’- என !
பெருமிதம் பொங்கச் சொல்லி!
சிரசில் மணிமகுடமும்,!
கழுத்ததில் மணிமாலையும் சூடி!
கம்பீர தோற்றம் கொண்டவளாய்!
பாரெங்கும் ரதத்தினிலே பவனி வந்தாள்!
எங்கள் தமிழன்னை !
பிரளத்தில் நகரம்தான்!
கடலுக்குள் மூழ்கும்!
தமிழ்க்கடலின் எழுச்சியினால்!
ஏழு கண்டங்களும்!
அதனிடத்தில் சிறைபட்டுப் போகும் !
கம்பன் இயற்றிய ‘கவி’ மாலையும்!
பாரதி பாடிய ‘பா’ மாலையும்!
வள்ளுவன் வடித்த ‘குறள்’ மாலையும்!
இயம்பிடுமே உலகுக்கு!
இயற்றமிழின் சிறப்பு!
இன்னதென்று!
சர்க்கரைப் பாகும், தேனும்!
அதனதன் இயல்பினில் ஒன்றாகுமா?!
சர்க்கரை உடலுக்கு கேடு!
தேன் உயிர்காக்கும் அருமருந்து!
தமிழ்த்தேனை அள்ளிப் பருகிடுவோம்!
அதன் இனிமையால் நல்வளம் பெருகி!
இல்லறம் சிறக்க!
இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்! !

ப.மதியழகன்