பாரதிபோல் பாரதனில் பார்த்ததுவும் உன்டோ ? - நம் !
பாரதத்தைப் பாட்டதனால் பாலித்தவர் உண்டோ ? !
பா-ரதத்தில் ஏறியே பவனியவன் வந்தான் - நல் !
பாரதத்தை உய்வித்திட பாடல்பல தந்தான்! !
சுதந்திரத் தேரதனில் சாரதியாய் நின்றான் - பெண்!
சமத்துவத்தை யேதனது சுவாசமெனக் கொண்டான்!!
மதவெறி கொண்டோரின் முகத்தினிலே உமிழ்ந்தான் - பொய் !
நிதம்கூறித் திரிவோரை நிந்தனைகள் புரிந்தான்! !
கந்தைக்குக் கூடகையில் காசிலாமல் கிடந்தான் - நம்!
சிந்தைக்கு சிந்துதந்து பாவரசாய் நடந்தான்! !
எந்தையர் நாடிதென எண்ணத்திலே பதித்தான் - வெறும் !
மந்தையான மக்கள்மனம் மாறிடவகை உரைத்தான்! !
மேலிவன் கீழிவனென மனிதருள் உண்டோ? - இம்!
மடமைதனைப் போக்கிநல் மாண்பினை வளர்த்தான்!!
ஆழ்கடலும் மலைகளுமே அரும்தோழர் என்பான் - சிற் !
அறிவுயிர் ஆயினும் அன்போடு அணைப்பான்! !
தமிழ்வாழ வேண்டும்மெனத் தினம்தினம் நிணைத்தான் - இவன் !
தான்வாழ நிணையாதத் தூயவனாய்த் திகழ்ந்தான்! !
அமிழ்தினும் இனியதமிழில் அரும்கவிகள் குவித்தான் - இவன் !
அச்சமது மடமையென அஞ்சாமை விதைத்தான்! !
ஒப்பில்லா உலககவி யெனவேதான் உயர்ந்தான் - நம் !
ஒருமைப்பாடு ஓங்கிடவே ஓய்வின்றி உழைத்தான்! !
செப்பும்கவி யாவும்நம் சிந்தணையை ஏற்றும் - இவன் !
செத்தான் என்பதில்லை சிரஞ்சீவி தான்நாளும்! !
!
பாண்டூ ... !
சிவகாசி.
+91 98421-42192
பாண்டூ